Home>>இந்தியா>>அரசுப் பள்ளிகள் பற்றி எழுதிய பிறகு வந்த எதிர்வினைகள் எனக்கு வியப்பூட்டவில்லை.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் பற்றி எழுதிய பிறகு வந்த எதிர்வினைகள் எனக்கு வியப்பூட்டவில்லை.

அரசுப் பள்ளிகள் பற்றி எழுதிய பிறகு வந்த எதிர்வினைகள் எனக்கு வியப்பூட்டவில்லை. பள்ளிக் கல்வியில் முதலீடு ஒன்றுமே இல்லாத நிலையில் பள்ளி கட்டிடங்கள் மராமத்த்திற்கு கூட தொழிலதிபர்கள் புரவலர் நிதிகளை வேண்டி நிற்கிறார்கள் தலைமை ஆசிரியர்கள். தரையில் அமர்ந்து படிக்கிறார்கள் மாணவர்கள்.

யாராவது நிதி அளித்தால் மட்டுமே பெஞ்சுகள் கிடைக்கும். பள்ளிக்கூடம் நடத்துவது அரசின் வேலையல்ல என்று ஒதுங்கி கொண்டுவிட்டு மதிப்பெண் நிறைய கொடுங்கள் என்று சொல்வது என்ன மாதிரியான அனுகுமுறை?
நம்மை விட ஏழ்மையான நிலையில் உள்ள ஒரிசா இந்த ஆண்டு மட்டும் ஆயிரம் நவீனப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் வசதியுடன் பள்ளிகளை கட்டுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆறாயிரம் பள்ளிகளை பராமரிக்க கூட பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பது என்ன மாதிரியான கொள்கை முடிவு?

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட குமாஸ்தா வேலை பார்க்கும் இடத்தில் உள்ளது. சரியாக புள்ளிகளை கொடுத்து விட்டு ஒதுங்கி நின்று விடும் வேலை அவர்களது.

பள்ளிக் கல்வி என்கிற முழுமையான அனுபவத்தை மாணவர்கள் பெற முடியாது. தனியாரின் வாசலில் நின்று கொண்டு எல்லோரும் புலம்பத் தான் செய்வார்கள்.

இளம் வயது போதைப் பழக்கம் இளம் வயது கற்பம் தரித்தல் என்று பல்வேறு சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கேள்விப்படாகிறோம்.

மிகப் பெரிய உள்கட்டமைப்பு இல்லாத காலத்தில் கூட அரசுப் பள்ளிகளில் கல்வித் துறையில் சாதிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என எல்லோரையும் எதிரெதிரே நிறுத்தி ஒரு மோசமான சூழல். இதை சமூக விரோத கும்பல் கையில் எடுத்துக் கொள்கிறது. கற்றல் கற்பித்தல் முறைகளை மேம்படுத்துதல் என்பது இரண்டாம் பட்சம் தான். ஒரு சமூகமாக கல்வியறிவு குறித்து நமக்கு தெளிவான கோரிக்கைகள் வேண்டும். ஆசிரியர்களளை ட்ரோல் செய்வது அல்லது சமூகத்தின் வேறு ஒரு பணியை ட்ரோல் செய்வது நமக்கு தீர்வுகளைத் தராது. அரசு கட்டியுள்ளது வெறும் ஏழு பொறியியல் கல்லூரிகள் தான்.

அரசு கல்வியை நமக்குத் தரும் என்கிற நம்பிக்கை மெல்ல குறைந்து வருகிறது. நான் தனியார் பள்ளிகளில் எனது உழைப்பில் வந்த பொருளைக் கட்டி நிற்கிறேன். ஒரு சமூகமாக இந்த பொருளாதார கொள்கைகளுக்கு நாம் கொடுத்துள்ள விலை பெரிது.

ஒன்பது மாணவர்கள் டிசி கொடுத்து அனுப்பப்பட்டது தெரிய வருகிறது. அதன் பின்னர் தான் இடைநிற்றலை விட பெரிய துயரம் இங்கே உள்ளது.

உள்ளதை உள்ளபடி உணர்ந்தால் தான் தீர்வு கிடைக்கும். மற்றபடி குதறி வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை.


திரு. இளங்கோ கல்லானை,
எழுத்தாளர்.


கட்டுரை சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply