Home>>கல்வி>>மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் கபசுர குடிநீர் வழங்கும் திட்டம்.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமருத்துவம்

மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் கபசுர குடிநீர் வழங்கும் திட்டம்.

நேசக்கரம் முன்னெடுப்பில், மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில் மன்னை இராசகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், நேசக்கரம் அமைப்புடன் இணைந்து மன்னார்குடி கல்லூரி மாணவர்களுக்கு கபசரகுடிநீர் வழங்கியது.

கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ். உஷா தலைமை வகித்தார். மாணவர்களிடம் அவர் பேசும் போது “உருமாறி வரும் ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை வாய்ந்தது. இதிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சமுக இடைவெளி கடைபிடித்தல் வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கபசரகுடிநீர் அனைத்து வைரஸ் நோய்களுக்கும் எதிர்ப்பாற்றல் தரக்கூடியது என கூறினார்.

இந்நிகழ்வில் மன்னார்குடி நேசக்கரம் அருண்ரவி, ஜான்சன், திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா, கல்லூரி பேராசிரியர்கள் ஜெ.கண்ணன், சு.வே.நேதாஜி, முனைவர் மணிமேகன் முனைவர் ராஜாசந்திரசேகரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ப.பிரபாகரன், முனைவர் ஜென்னி ஏற்பாடு செய்திருந்தனர்.


செய்தி உதவி:
நேசக்கரம் அமைப்பு,
மன்னார்குடி.

Leave a Reply