Home>>அரசியல்>>கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்

கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும்.

காவிரிப்படுகை பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உள்ள கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும் – கோட்டூர் அருகே நல்லூர் சிபிஐ கிளை மாநாட்டில் முன்னால் எம்எல்ஏ கே உலகநாதன் பரபரப்பு பேச்சு.

மேலும் இந்த மாநாட்டில் கே.உலகநாதன் அவர்களின் உரை துளிகள்:

பாசக மத சாதி ரீதியாக பிளவுப்படுத்தி அரசியல் செய்கிறது. பாசக போடும் தேசபக்தி நாடகம் தான் போலியானது. தேச பக்தி இருந்தால் பொதுத்துறை நிறுவனங்களை விற்பார்களா? ராணுவ ரகசியங்கள் விற்கபடுவது நடக்குமா?

பாசகவினர் பச்சையாக பொய் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றார்கள், கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு பத்து லட்சம் பணம் வங்கி கணக்கில் போடுவோம் என்றார்கள், இதையல்லாம் கேட்டால் நாங்கள் எப்போது சொன்னோம் என பச்சையாக பொய் சொல்கிறார்கள்.

பாசக என்னும் வகுப்புவாத சக்திகளை உண்மையில் வீழ்த்த நினைத்தால் கம்யூனிஸ்ட் கட்சியை பலபடுத்த வேண்டும்.

கடைசியாக கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் செயல்படாத போக்கு குறித்து சுட்டி காட்டியது. நமது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நமது கட்சி உறுப்பினர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் செயல்படாமல் இருக்கும் போது நம் பகுதியில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். அனைத்து உறுப்பினர்களும் செயல்பட்டால் இன்னும் வலிமையான சக்தி கொண்ட மகத்தான பேரியக்கமாக மீண்டும் உருவெடுக்க முடியும். அவ்வாறு வலுவடைந்தால் தான் மக்கள் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் சாதிய மதவாத சக்திகளை சமரசமின்றி வலுவாக எதிர் கொள்ள முடியும்.

கட்சியில் இளைஞர்களை பெண்களை அதிகளவில் இணைக்க வேண்டும். நமது காவிரிப்படுகை பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உள்ள கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும்.

என பல கருத்துக்களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் முன்னால் எம்எல்ஏவுமான கே.உலகநாதன் அவர்கள் கோட்டூர் ஒன்றியம் நல்லூர் சிபிஐ கிளை மாநாட்டில் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.செந்தில்நாதன், முன்னால் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வி.தங்கையன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பரந்தாமன், சிவஞானம், ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply