Home>>அரசியல்>>தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!

அப்பாடா… இன்பத்தேன் வந்து பாய்கிறது காதுகளில்…

“தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!” என இன்று (03/12/2021) அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்!

வெறும் அரசாணையுடன் நின்று விடாமல், அது ஒவ்வொரு தேர்விலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

தமிழக அரசின் எந்த ஒரு துறையிலும், தமிழ் தெரியாத ஒருவர்கூட இல்லை எனும் நிலை எதிர்காலத்தில் வர வேண்டும்!

அப்படியே நகர்ந்து, தமிழை ஒரு பாடமாகவேனும் கற்காமல் தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாது எனும் நிலை கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களாக இருந்து கொண்டு, தமிழே எழுத படிக்கத் தெரியாமல் வரும் இளைய தலைமுறையினர் மிரட்சியைக் கொடுக்கின்றனர். திரைப்படவுலகில் கேட்கவே வேண்டாம், தமிழா..?? வீசை என்ன விலைதான்? !!!

தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குங்கள். தமிழர்கள், தமிழ் தெரியவில்லையேல் அதற்காக வெட்கப்படுங்கள்!


கவிஞர். தாமரை,
திரைப்பட பாடலாசிரியர்.


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply