Home>>செய்திகள்>>74 நாட்களாக போராடி வரும் ஆரோக்கியா பால் நிறுவன தொழிலாளர்கள்.
செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

74 நாட்களாக போராடி வரும் ஆரோக்கியா பால் நிறுவன தொழிலாளர்கள்.

ஆரோக்கியா பால் (HATSUN) தொழிற்சாலையின் தவறான செயல்பாடுகளை கண்டித்து 74 நாட்களாக அதன் நிறுவன தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.


1. கட்சன் தொழிற்சாலையில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் இயங்கி வருகிறது இதுவரை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஒருவர் கூட கிடையாது.

2. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிப்பதில்லை. ஏனென்றால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பணிக்கு அனுமதிப்பதில்லை.

3.அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை ‌.

4.கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு முறையாக PF பணம் வழங்கப்படுவதில்லை.

5.தொடர்ச்சியாக 240 நாட்களுக்கு மேல் பணி புரியும் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது சட்டம் ஆனால் இதை இந்த தொழிற்சாலையில் செயல்படுத்துவதில்லை.

6.விவசாயிகளிடம் 23 ரூபாய்க்கு பாலை கொள்முதல் செய்து அதை மக்களிடம் 62 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை இலாபம் பார்த்து வருகிறது கட்சன் நிர்வாகம்.

7.தொடர்ந்து உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிப்பதில்லை. மாறாக வட மாநில தொழிலாளர்களை அதிகமாக பணிக்கு ஆலை நிர்வாகத்தால் அமர்த்தப்படுகிறது.

8.இந்த ஊரில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டிக்கொண்டு அதிக அளவில் அமிலங்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது.

9.இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு அதிக பட்ச ஊதிய உயர்வு 1000 ரூபாய் தான். இந்த தொழிற்சாலை தென்னிந்தியாவின் மிகப் பெரிய பால் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

10. தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஊழியர்களை மதிப்பதே கிடையாது.

குறிப்பு: கட்சன் ஆரோக்யா பால் தொழிற்சாலையின் முதலாளி தமிழ் நாட்டின் 4 பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் 74 நாட்களாக தொழிலாளர் போராடி வருகிறார்கள் ஆனால் அவர்களின் கோரிக்கையை இதுவரை காது கொடுத்துக் கேட்க நேரமில்லை தொழிற்சாலையின் முதலாளி சந்திரமோகன் அவர்களுக்கு.


செய்தி உதவி:
திரு. வேல் பிரபா.


செய்தி சேகரிப்பு:
திரு. அருள் பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply