Home>>காவல்துறை>>பரவாக்கோட்டையை சேர்ந்த முதிய பெண்மணிக்கு கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருட்டு.
காவல்துறைசெய்திகள்திருவாரூர்பெண்கள் பகுதிமன்னார்குடி

பரவாக்கோட்டையை சேர்ந்த முதிய பெண்மணிக்கு கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருட்டு.

பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள அசேசம் வாஞ்சிநாதன் நகரில் வசித்து வருகிறார். தனக்கு துணையாக வீட்டில் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஆள் தேவை என்று பரவாக்கோட்டையில் உள்ள தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 05.11.2021 அன்று பரவாக்கோட்டை சாமிநாதன் தெரு மற்றும் குஞ்சான் தெரு பகுதியில் வெளியூரை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீட்டு வேலை தேடி சில கடைகளுக்கும் வீடுகளுக்கும் சென்று கேட்டுள்ளார். அதனால் அந்த பெண்ணை சில உறவினர்கள் அசேசத்திற்கு ஆள் தேவை என்று அனுப்பி வைத்துள்ளனர். அங்கே சென்று இரண்டு நாட்கள் நல்லவர் போல் நம்ப வைத்திருக்கிறார்.

07.11.2021 அன்று இரவு ஏதோ மயக்க மருந்தை கசாயத்தில் கலந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவர் அணிந்திருந்த தாலிசங்கிலி 3 பவுன், வளையல் 3 பவுன், தோடு மற்றும் மோதிரம் இதர சிறிய நகைகள் ஆக மொத்தம் 10 பவுன் நகைகளை கழட்டி சென்று தலைமறைவாகி விட்டார்.

தகவலறிந்த உறவினர்கள் அந்த முதிய பாட்டியை மீட்டு மன்னார்குடி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் அளித்துள்ளனர். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாத காரணமாக நேற்று இரவு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அம்முதிய பெண்மணி சேர்க்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக மன்னார்குடி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறையினரும் விரைவான நடவடிக்கைகளை எடுத்து அப்பெண்மணியை தேடி வருகின்றனர். அந்த பெண் மூன்று நாட்களுக்கு முன் மன்னார்குடி ருக்மணி குளம் அருகே உள்ள ஒரு வீட்டை நாள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் என்ற தகவல் கிடைத்த நிலையில், உறவினர்களும் காவல் துறையும் தேடிய வரையில் அவரை பிடிக்க இயலவில்லை. பரவாக்கோட்டையில் உள்ள எந்த CCTV காணொலி கருவியிலும் அந்த பெண்மணியின் முகம் பதிவாகவில்லை. மேலும் உறவினர்களும் காவல் துறையும் தேடி வருகின்றனர்.

அந்த திருட்டுப் பெண்மணி பரவாக்கோட்டை அண்ணாசிலை மற்றும் மாரியம்மன் கோவில் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றதாக தகவல். ஆகையால் ஏதேனும் கடைகளில் அல்லது வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலி கருவிகளில் அந்த சந்தேகத்திற்கு இடமான பெண் பதிவு செய்யப்பட்டு இருந்தால் தயவுசெய்து உடனடியாக பரவாக்கோட்டை அல்லது மன்னார்குடி காவல் நிலையத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

இது குறித்த தேடுதலில் ஈடுபட்டு வரும் உறவினர் “தெருக்களிலோ அல்லது வீடுகளிலோ சந்தேகத்திற்கு உண்டான அறிமுகமில்லாத நபர்களை அனுமதிக்காதீர்கள். யாரேனும் வேலை தேடி வந்தாலோ அல்லது ஆண்மீக பயனத்திற்கு பணம் வேண்டும் என்று வந்தாலோ தீர விசாரிக்காமல் அனுமதிக்காதீர்கள். இன்னும் பரவாக்கோட்டையில் வெளியூர் நபர்கள் ஒரு சிலர் குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் ஆண்மீக பயணம் செல்வதற்கு பணம் வசூலிக்க வருவது போல் தகவல் இருக்கிறது. அனைத்து பரவாக்கோட்டை மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கவும்” எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் அந்த பெண்ணின் இடது கையில் மிகப்பெரிய தழும்பு இருந்ததாக தகவல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி குணமடைந்து விரைவில் நலம்பெற வேண்டுகிறோம். மேலும் இது போன்ற நிகழ்வு ஏற்படாமல் இருக்க பரவாக்கோட்டை மற்றும் மன்னார்குடி காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பெண்மணியை கைது செய்து நகைகளை மீட்பதோடு, வீட்டில் தனித்திருக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் மீள செய்ய வேண்டும்.

இது போன்று தனித்திருக்கும் எவராக இருந்தாலும் கட்டாயம் கண்காணிப்பு புகைப்பட கருவி பொருத்திக் கொள்ளுங்கள். எல்லாவையிலும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமயங்களில் மனிதர்களை விட கருவிகளே அசம்பாவிததிலிருந்து பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


செய்தி சேகரிப்பு:
இளவரசி இளங்கோவன்,
கனடா.

Leave a Reply