Home>>இந்தியா>>டிசம்பர் 29ஆம் தேதி திருவாரூரில் மையப்படுத்தப்பட்ட வெற்றி விழா பேரணி.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

டிசம்பர் 29ஆம் தேதி திருவாரூரில் மையப்படுத்தப்பட்ட வெற்றி விழா பேரணி.

(தமிழாக்கம்)

அன்பான தோழர்களே,

டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற SKM தமிழ்நாடு மாநில செயற்குழு, சமீபத்திய முன்னேற்றங்களை ஆய்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி திருவாரூரில் மையப்படுத்தப்பட்ட வெற்றி விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது. திருவாரூரில் 29ஆம் தேதி நடைபெறும் வெற்றி விழாவில், எஸ்.கே.எம்.இன் அகில இந்திய செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரை அழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய மாநில செயற்பாட்டுக் குழு கூட்டத்தில், நமது SKM தலைவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஆம். ஒரு அற்புதமான மற்றும் வரலாற்று வெற்றியைப் பெறுவதற்காக, நம் தலைவர்களுடன் பாறை போல உறுதியாக நின்று, டெல்லி எல்லைகளில் உள்ள மோர்ச்சாக்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கியிருந்த, SKM தலைவர்களையும், ஆயிரக்கணக்கான விவசாயிகளையும் வாழ்த்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க இந்த இயக்கத்தை கொச்சைப்படுத்தவும், பிளவுபடுத்தவும் ஒன்றிய அரசு பலமுறை முயற்சித்த போதிலும், உங்களின் நேர்மையான செயல்பாடுகளினாலும், கூட்டுத் தலைமையாலும் அரசால் வெற்றிபெற முடியவில்லை. கிராமப்புற விவசாயிகளை குறிப்பாக பெண்களை அணிதிரட்டுவதில் நீங்கள் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் முன்னின்று இயக்கத்தை வழிநடத்தினீர்கள். இந்திய விவசாயிகள் தங்களுக்குள்ளே இருந்த திறனைக் கண்டறிந்து, ஒரு வர்க்கமாக ஒன்றுபட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வாறு நடக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாததாக இருந்தது. இந்த மகத்தான 13 மாத போராட்டத்திற்கு (பயிற்சி பட்டறை) நன்றியைத் தெரிவிக்கிறோம்.

விவசாயிகளின் இந்த இயக்கம் மெல்ல மெல்ல மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்த எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும், கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்த மக்களுக்கு இது ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. கடைசி வரை அனைத்து அவதூறுகளையும் பொய்யாக்கி, இந்த இயக்கத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் நீங்கள் மிக பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் காட்டியுள்ளீர்கள்.

நாங்கள் எஸ்.கே.எம்.இன் ஒரு அங்கம் என அறிவித்துக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறோம் மற்றும்
எஸ்.கே.எம். விடுத்த அனைத்து அறைகூவல்களையும் நிறைவேற்றினோம் என்று பணிவுடன் கூறி கொள்கிறோம்.
மீண்டும் ஒருமுறை எஸ்.கே.எம். தமிழ்நாடு சார்பாக அனைத்து தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
(மாநிலச் செயற்பாட்டுக் குழுவிற்காக)
எஸ்.கே.எம். தமிழ்நாடு.
10.12.2021.

Leave a Reply