குன்னலூர் மற்றும் எக்கல் ஊராட்சி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து இயக்கிட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை அடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று சாலையை ஆய்வு: விரைவில் பேருந்து இயக்க முடிவு.
முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் மற்றும் எக்கல் ஊராட்சி பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டபேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் குறைகளை கேட்டறிந்த போது “பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் நடந்தே வந்து பாண்டி என்னும் இடத்தில் பேருந்து ஏறும் நிலை உள்ளது. இதனை போக்கிட ஏற்கனவே இயங்கிய தனியார் மினிபஸ் இயக்கிட வேண்டும் இல்லையேல் புதிய அரசு பேருந்து இயக்கிட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி போக்குவரத்து பணிமனைக்கு நேரில் சென்று மேலாளரிடம் தனியார் சிறிய பேருந்து இயக்க சாத்தியம் இல்லா நிலை உள்ளதால் அரசு பேருந்து இயக்கிட வலியுறுத்தினார்.
இதனையடுத்து இன்று (10/12/2021) திருத்துறைப்பூண்டி போக்குவரத்து கழக அதிகாரிகள் பாண்டி குன்னலூர் எக்கல் பகுதிகளில் உள்ள சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விரைவில் இந்த பகுதிக்கு பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தனர்.
—
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.