Home>>இந்தியா>>நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்?
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்?

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்? என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுதலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப தமிழக ஆளுனரை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து தொடக்கி வைத்து பேசினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் சு.பாலசுப்ரமணியன், ஜேபி.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுகணக்கான மாணவர்கள் இளைஞர்கள் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துரைப்பாண்டி.

Leave a Reply