Home>>சுற்றுசூழல்>>மன்னார்குடி நகராட்சியின் புதிய குப்பை கிடங்கா?

வணிக வரி துறை அலுவலகம், தனி வட்டாச்சியர் அலுவலகம், பல வார்டுகளுக்கான மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை உள்ள நகராட்சி கட்டிடம். ஏற்கனவே இங்கு தான் Sub Court செயல்பட்டது. இந்த கட்டிடத்தின் வாசலில் தான் இந்த அவல நிலை. எதிரில் மாவட்ட தலைமை மருத்துவமனை, பெருமை வாய்ந்த ஆனந்த விநாயகர் ஆலயம் என உள்ளது.

இத்துடன் இரண்டு முக்கிய பள்ளிகளான தேசிய மேல்நிலை பள்ளி, மாடர்ன் பள்ளி. இவற்றை சுற்றிலும் கூட குப்பை மேடுகள். மன்னார்குடி எங்கும் இப்படி பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தொடர்ந்து கிடக்கிறது.

மருத்துவமனையை ஒட்டி எப்போதும் செல்லும் சாக்கடை, மேலும் சுற்றிலும் கழிவுகளுடன் பராமரிப்பின்றி அந்த பகுதி இருந்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் இதே நிலை தான். இவற்றை எல்லாம் அதற்குரிய நிர்வாக பணியாளர்கள் கண்டுகொள்வதில்லை.


செய்தி உதவி:
திரு. ஆனந்த்ராஜ்,
மன்னார்குடி நகர செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,
மன்னார்குடி.


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply