தமிழகத்தின் பல இடங்களில் உதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்துவது சரியானதல்ல.
பழனிசாமி அரசாங்கத்தைப் போலவே ஸ்டாலின் அரசும் மாற்றுத்திறனாளிகளிடம் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும். அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.