Home>>இந்தியா>>கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும்.

இப்பிரச்னையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசிய கருத்துகளில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறதா?என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழ்நாட்டின் விளைநிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகும். எனவே, எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை தமிழகத்தின் மீது வலிந்து திணிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply