Home>>செய்திகள்>>தஞ்சை மாநகராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்

தஞ்சை மாநகராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சை மாநகராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது. செயல்படுத்திய இடங்கள் அனைத்தும் அவ்வப்போது சாக்கடை முடிகள் உடைந்து தெருக்களில் ஆறுகளைப் போல் கழிவு நீர் ஓடி, பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி, குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவார் சூழல் ஏற்படுகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் அதை மேற்பார்வை செய்கிற பணியாளர்கள் அதற்கு மேல் மாநகரத்தில் உள்ள ஆணையாளர் இவைகள் எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. சாதாரண மக்கள் குடியிருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாகி நோய் நொடிகளுக்கு ஆளாகிறார்கள். அந்த பகுதியில் உள்ள வயதானவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகிறார்கள் இவர்களைப் பற்றி மாநகராட்சி நிர்வாகம் எத்தகைய கவனத்தையும் செலுத்த மறுக்கிறது.

சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தெருக்களில் பணியாளர்கள் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா, அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் நொடிகள் பரவுகிறது என்று ஆய்வு செய்கிற மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. அந்த கழிவுநீர் அருகாமையில் உள்ள பள்ளங்களில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. அந்த கழிவுநீரில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு மிகச் சிறந்த மாநகராட்சி என்கிற விருதினை அளித்திருப்பது புரியாத புதிராக இருக்கிறது.

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தெருக்களில் தேங்கி உள்ள கழிவு நீரை உரிய வடிகால் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டிகளை தூய்மை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு “கையுறை, காலுறை, முக கவசம் ஆகியவைகளை உடனடியாக அவர்களுக்கு தந்து அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


திரு. கி.நா. பனசை அரங்கன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி,
22.12.2021

Leave a Reply