நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று தியாகிகள் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
இன்று (25/12/2021) கீழவெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் தலைமையில் தேசியக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.பழனிச்சாமி, மாநிலக்குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. க.மாரிமுத்து, நாகை மாவட்ட செயலாளர் எஸ்எஸ்.சம்பந்தம் ஆகியோர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்வில் கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மேகலா, ஒன்றியச் செயலாளர்கள் கீழ்வேளுர் எம்கே முருகையன், கீழையூர் செல்வம், திருமருகல் பாபுஜி, முத்துப்பேட்டை முருகையன் மற்றும் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்து தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
—
செய்தி உதவி:
திரு. கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.