திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் நீடாமங்கலம் தாலுக்காவில் உள்ள எடமேலையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை பாதுகாப்பிற்கு சரியான வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
இதனை உடனடியாக உணவுத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு, நெல் பாதுகாப்பிற்கு மேற்கூரை அமைத்து பாதுகாக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாம் சிந்தும் ஒவ்வொரு நெல்மணிகளுக்கும் வருங்கால தலைமுறையினரிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. கிஷோர்,
மன்னார்குடி.