Home>>தமிழ்நாடு>>வெக்கை புதினம் – ஒரு வாசிப்பு அனுபவம்.
தமிழ்நாடுதிருவாரூர்நூல்கள்மன்னார்குடிமாவட்டங்கள்

வெக்கை புதினம் – ஒரு வாசிப்பு அனுபவம்.

இந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அசுரன். தம்பி ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார் படத்தை பார்த்தாச்சி கதை இது தான் என்பது தெயரியும், சரி இந்த புதினத்தை படிப்பதன் மூலமாக எந்த அளவு வேறுபடுகிறது என்று போர்போம் என சிந்தனையில் இரு தினங்களுக்கு முன் வாசிக்க தொடங்கினேன்.

படத்திற்க்கும், புதினத்திற்க்கும் கதையின் சாரம் ஒன்றுதான் திரைகதைக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருப்பது எதார்த்தம். அதை விடுத்து படத்தில் சிதம்பரம் சிறுப்பிள்ளை தனமாக இருப்பது போல இருக்கும் ஆனால் புதினத்தில் சிதம்பரம் தான் நல்ல விவரமானவனாக இருக்கிறான். சிதம்பரம் மூலமாக புதின ஆசிரியர் போரப்போக்கில் அரசியல்வாதி, அரசு அதிகாரி, பணம்படைத்தவன், பாமரன் நிலை என்ன என்பதை மிக தெளிவாக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் ஒரு சிலவற்றை கிழே குறுப்பிடுகிறேன் பாருங்கள்.

கட்சிக்காரர்கள் ஊர்ச்சந்திகளில் கூட்டம்போட்டு ஒருவருக் கொருவர் திட்டிக்கொள்வார்கள். உன் வண்டவாளம் தெரியாதா குட்டை உடைப்பேன் என்று ஆவேசமாகப் பேசுவார்கள். மறுநாள் பார்த்தால் ரெண்டுபேரும் சேர்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பார்கள். சில கட்சிக்காரர்கள் பணக்காரர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவார்கள். பிறகு அவர்கள் கடைகளுக்கு உண்டியலைத் தூக்கிக்கொண்டுப் போவார்கள். பார்க்கச் சிரிப்பாயிருக்கும்.

காவல்துறையினர் தவறு செய்தவனை விட்டு, விட்டு பக்கத்து வீட்டுக்கரனையும், பெண்களையும் தொல்லை செய்வார்கள். சில நேரம் நல்ல திடகாத்திமாக இருப்பவனை விசாரனைக்கு என்று அழைத்துச்சென்று அடித்து துவைத்து அனுப்புவார்கள். ஆள் சிக்கவில்லை என்றால் தெருவில் நிற்பவர்களையோ இல்லை பிச்சகாரனையோ அழைத்துக்கொண்டு போவார்கள். பார்க்கச் சிரிப்பாயிருக்கும்.

இவை இரண்டும் புதினத்தில் உள்ளவை இப்படி பல உள்ளது. கதைக் கள வட்டார வழுக்கு பிரமாதம் கதையோடு சரியாக ஒன்றுகிறது. அண்ணனை கொண்றவனை 15 வயது கொண்ட அவன் தம்பி பழிவாங்கிய உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு வெறும் ஒரு வாரம் நடக்கும் நிகழ்வுகளை மிக அற்புதமாக ஆசிரியர் ஐயா பூமணி அவர்கள் புனைந்துள்ளார். மிக சிறப்பான தமிழ் கிளாசிக் நாவல் வாய்ப்பு கிடைப்பின் வாசியுங்கள்


திரு. மனோ குணசேகரன்,
புள்ளவராயன்குடிகாடு,
மன்னார்குடி.

Leave a Reply