மன்னார்குடி காந்தி சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் கனரக வாகனங்களை கடை வீதியில் அனுமதித்தால் இது போன்று நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதே போல் கடைகளுக்கு சரக்கு ஏற்றுவது இறக்குவதை காலை 8 மணிக்குள் முடித்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் 4 சக்கர வாகனங்களை கடைவீதியில் நடுசாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
அதே போல் காந்தி ரோட்டில் பார்க்கிங் வசதியில்லாத வணிக வளாகங்கள், திருமண மண்டபம் என்று எதை பற்றியும் கவலை படாமல் அனுமதி அளித்த நகராட்சி நிர்வாகம். இதனால் காலை நேரத்தில் அவசர வேலையாக செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து காவல்துறை கண்டு கொள்வதில்லை. இதனால் கடை தெரு சென்று வருவதாக இருந்தால் பெரும் சிரமமாக உள்ளது. விழா காலங்களில் சொல்ல வேண்டியதே இல்லை
எனவே பொது மக்களின் இந்த சிரமத்தை போக்க அரசு நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
—
செய்தி உதவி:
திரு. ஆனந்த்ராஜ்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,
நகர்மன்ற செயலாளர்,
மன்னார்குடி.