Home>>கலை>>மன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.
கலைகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்விளையாட்டு

மன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.

மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்றதற்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் வாசு பாராட்டுகள் தெரிவித்தார். சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் மன்னார்குடி தேசிய பள்ளி
மாணவர்கள் எம்.சூரியா எம். பேரரசு, ஜெ. ஆகாஷ், ஆகியோர் ஸ்டிக் பைட்டிங் போட்டியில் தங்க பதக்கமும் கம்பு சுற்றுதல் போட்டியில் தங்க பதக்கமும் வி. பாவேஷ், கம்பு சுற்றுதல் போட்டியில் தங்கப் பதக்கமும் ஸ்டிக் பைட்டிங் கில் வெள்ளி பதக்கமும் கே. கவியரசன் ஸ்டிக் பைட்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கமும் மற்றும் கம்பு சுற்றுதல் போட்டியில் தங்க பதக்கமும் பெற்று வந்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் இணை இயக்குநர் எம். வாசு கலந்து கொண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் இரா. மணிவண்ணன் முன்னிலை வகித்தார் திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா தலைமை ஆசிரியர் டி.எல். இராதாகிருஷ்ணன் அலுவலர் தியாகராஜன், ஆசிரியர்கள் மன்னார்குடி ஒளிமயம் சிலம்பம் மற்றும் விளையாட்டு அகாடமி தலைமை பயிற்சியாளர் விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply