Home>>ஆன்மீகம்>>பக்தர்கள் கேட்டு கொண்டால் தான் சமசுகிருத மொழியில் செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

பக்தர்கள் கேட்டு கொண்டால் தான் சமசுகிருத மொழியில் செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை வழிபாட்டு நிகழ்வு 5.1.2022 இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர்), பதிணென் சித்தர் பீடம் சத்தியபாமா (நிறுவனர்- சத்தியபாமா அறக்கட்டளை), மோகன சுந்தர சுவாமிகள் (திருவில்லிபுத்தூர்)
தமிழக முன்னேற்ற கழக நிறுவனர் திரு.ம.து.ராஜ்குமார்.

தமிழ்தேசிய பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர்கள் திரு.கதிர்நிலவன், திரு.சிவா மற்றும் புருஷோத்தமன், கரிகாலன், ரேவதி, கவிதா ஆகியோர்களும் பங்கேற்றனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை இயல்பிலேயே (Default) நடத்தப்படவில்லை.

நாம் கேட்டால் தான் தமிழில் அர்ச்சனை செய்கிறார்கள். எடுத்தவுடன் சமசுகிருத மொழியில் தான் அர்ச்சனை செய்கிறார்கள். இதை தமிழக அரசு மாற்ற வேண்டும். இயல்பாக தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும், பக்தர்கள் கேட்டு கொண்டால் தான் சமசுகிருத மொழியில் செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

தமிழக அரசு அச்சிட்டு வெளியிட்ட தமிழில் உள்ள பூசை பாடல்களை பாடாமல் வெறும் “போற்றி, போற்றி”யை மட்டுமே பாடுகிறார்கள்.

கோவில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் செய்து வந்துள்ளோம். தமிழ்நாடு அரசின், அறநிலையத்துறை இதை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செய்தி உதவி:
திரு. விசுவநாதன் கரிகாலன்.

Leave a Reply