Home>>உலகம்>>அமெரிக்கா>>உலகத்தமிழர் நாள் 12,ஜனவரி- 2022 பன்னாட்டுக் கருத்தரங்கம்
புலம் பெயர்ந்த உலக தமிழர் நாள்
அமெரிக்காஇலக்கியம்உலகம்கனடாசிங்கப்பூர்செய்திகள்தமிழ்நாடுமலேசியா

உலகத்தமிழர் நாள் 12,ஜனவரி- 2022 பன்னாட்டுக் கருத்தரங்கம்

புலம்பெயர்ந்த தமிழர்களின் நல் வாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி “புலம் பெயர்ந்த உலக தமிழர் நாளாக” கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜனவரி 12, 13 ஆகிய 2 நாட்கள் “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்” சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக அயலகத் தமிழ்ர் நாள் விழா “தமிழால் இணைவோம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று விழா பேருரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி. கே. எஸ். மஸ்தான் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.

முதலாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் 2022 நிகழ்வுகள்:

  • “அயலகத் தமிழர் நல வாரியம்” மற்றும் “24*7” இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம் துவக்கி வைத்தல்.
  • உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
  • அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
  • “அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, இலக்கண / இலக்கியம், வரலாறு, ஆய்வுரைகள், கட்டுரைகள் வெளியிடுதல்.
    “தமிழ் இணையக்கல்வி கழகத்தின்” மூலம் தமிழ் கற்றல் / கற்பித்தல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் மற்றும் “அயலக உலகத்தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வி துறையில் குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயிலுதலில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் (நேரடி / தொலைதூர கல்வி) உள்ள வாய்ப்புகள் தொடர்பான அமர்வு.
  • நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் மற்றும் திரைப்பட பாடல்கள் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
  • “அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “தாய் மண்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.

இணைய வழியில் கண்டுகளிக்க https://nrtreg.xenovex.com/register/1 இணையவழி முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்காகஉலகத் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்
https://nrtamils.tn.gov.in/en/உலகத் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் எழுதி கட்டுரைகளாக தொகுத்து வெளியிடப்பட உள்ளது. கட்டுரையாளர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்https://docs.google.com/forms/d/e/1FAIpQLScCsKXSOz8K2Qzz_QDuhrv6I6EglixJF8vkiZgOcTGyc5xJCg/viewformகட்டுரையாளர்கள் சுயமாக படைத்து அனுப்ப விரும்பும் கட்டுரையின் தலைப்பு(கீழுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிடவும்)1.வெளிநாட்டுத் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகள்2.வெளிநாட்டில் தமிழர்களின் வரலாறு3.வெளிநாட்டில் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழியில் தமிழ் மொழியின் தனித்துவம்4.வெளிநாட்டு மக்கள் தொகையில் தமிழர்களின் புள்ளிவிவரம் சார்ந்த மக்கள் தொகை பற்றிய சிந்தனைகள்5.வெளிநாட்டில் தமிழர் பண்பாடு வெளிநாட்டில் தமிழரின் கலாச்சாரம்6.வெளிநாட்டில் தமிழரின் நாகரிகம்7.வெளிநாட்டில் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு8.வெளிநாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றங்கள்9.வெளிநாட்டில் தமிழர்களின் பல்வேறு துறை அமைப்புகள்/ சங்கங்கள் பற்றிய பதிவுகள்10.வெளிநாட்டில் தமிழர்களுக்கான பள்ளி கல்லூரி கல்வி சார்ந்த நிறுவனங்களின் தமிழ் பணிகள்11.வெளிநாட்டில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனைகள்12.வெளிநாட்டு தமிழர்களின் படைப்புகள்/ படைப்பாளர்களின் படைப்பாளுமை பற்றிய சிந்தனைகள்13.வெளிநாட்டு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்த பன்முக படைப்புகளின் வழியாக தமிழர்களின் வாழ்வியல்14.வெளிநாட்டில் வானொலி/ தொலைக்காட்சி/ இதழ்கள்/ இணைய இதழ்கள் பற்றிய பதிவுகள்15.வெளிநாட்டில் தமிழார்ந்த கல்வெட்டியல்  /செப்பேடுகள் கோவில்கள் முதலிய சின்னங்கள் பற்றிய பதிவுகள்16.வெளிநாட்டில் தமிழர்களின் விழாக்கள்/ நம்பிக்கைகள்/சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்17.நீங்கள் வாழும் வெளிநாட்டில் உங்களுக்கான தேவைகள்( நீங்கள் வாழும் தமிழர்களின் பொதுநலம் பற்றிய முழுமையான18.நீங்கள் இருக்கும் நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு  செய்ய விரும்பும் சேவைகள்19.வெளிநாட்டு தமிழர்களாக நீங்கள் வாழும் காலங்களில் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்20.வெளிநாட்டு தமிழர்களின் எதிர்காலவியல் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள்21.மேலும் நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்க்கும் விதமான ஆக்கபூர்வமான சிந்தனைகள்22. தமிழ்ச் செவ்வியல்-41 இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்) வரை பதிவாகி உள்ள உலகியல் சிந்தனைகள்,உலகத் தமிழர்களின் வணிக தொடர்புகள், மற்றும் உலகளாவிய கருத்தியல் பொருண்மைகள்மேற்காணும் ஏதாவது ஒரு தலைப்பில் மிகச் சிறப்பான கட்டுரை அமைத்து உரிய தேதிக்குள் 22.12.2021pannattutamizh2022@gmail.com   என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் எழுதவைத்து பயன் பெறச் செய்யுங்கள்.நன்றி

தொடர்புகளுக்கு
Contact us on / தொடர்பு கொள்ள
Land Line No : 04428515288
Mobile No : +91 9940256444 / +91 9600023645
Email : tndiasporaday2022@gmail.com

 

Leave a Reply