Home>>கல்வி>>மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉருவச்சிலைக்கு மலர மாலை அணிவித்து பின்னர் குறுங்காடுகள் வனப்பகுதியில் மரக்கன்றினை நட்டார்.

தொடர்ந்து மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா வரவேற்று பேசினார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கைலாசம் தலைமை வகித்தார் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் இரா. மணிவண்ணன் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றி கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும் சான்றிதழ்களும் வழங்கினார்.

13 பள்ளிகளில் இருந்து 54 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். எனக்கு பிடித்த விவேகானந்தர் என்கிற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த போட்டியில் திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி இர. நிருபா முதல் பரிசினையும் தூய வளனார் மெட்ரிக் பள்ளி கா. சுவாதி இரண்டாம் பரிசினையும் ஸ்ரீ சண்முகா மெட்ரிக் பள்ளி ஜெ. கீர்த்தனா மூன்றாம் பரிசினையும் பெற்றனர் இதே போல் இன்றைய சூழ்நிலைக்கு சுவாமி விவேகானந்தர் தேவை என்கிற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவி த. சஹானா சாவ்லா முதல் பரிசினையும் திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி டி. பவந்தினி இரண்டாம் பரிசினையும் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அகல்யா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் புத்தகம் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வர் மாரியப்பன் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் குருசாமி அஞ்சலகத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் குப்புசாமி பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் துரை நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply