தமிழக அரசின் வார இறுதி முழு ஊரடங்கு காரணமாக, தமிழக அரசின் ஊரடங்கு விதிகளுக்கு கீழ்படிந்து பயிற்சி மருத்துவர்கள் ஆகிய நாங்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை விடுதியிலிருந்து மேற்கொண்டோம், இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் நடைபெறும்.
மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படுவது போல அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதற்காக நான்கு நாட்களாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசீலனை செய்து விரைவில் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்
—
செய்தி உதவி:
அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்.