Home>>இலக்கியம்>>கொட்டு மொழக்கு – வாசிப்பு அனுபவம்
கொட்டு மொழக்கு
இலக்கியம்நூல்கள்மன்னார்குடி

கொட்டு மொழக்கு – வாசிப்பு அனுபவம்

நூலின் பெயர்: கொட்டு மொழக்கு
ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்

செனையில் ஒரு பன்நாட்டு கார்பிரேட் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரியும் ராசு தன் தாய்வழி தாதா(அப்புச்சி) இறுப்புக்கு கரூர் பக்கம் உள்ள சொந்த கிரமத்துக்கு(புதூர்) செல்கிறான் அங்கு நடக்கும் சம்பவங்களும் அதை கொண்டு அவன் வாழ்வில் நடந்தவையும் முன் பின் நகர்த்தி பயணப்படுவதே இந்த புனைவு.

ஒரு மரணம் நிகழும் போது அங்கு சொந்தபந்தம், சுற்றம், நட்பு என கூடும் இடமாக அழுகை, சண்டை, சடங்கு சம்பிர்தயாம்(அவற்றின் தொன்மை) பறையிசை என இருப்பது இயல்பு. அதை கொங்கு தமிழில் வாசிக்கவே கொட்டு மொழக்கு.

பள்ளிகளில் கடைசிப்பெஞ்ச்(இருக்கை) மாப்ளபெஞ்ச் என்று கூறுவார்கள் அதாவது படிக்காத குறும்பு தனம் அதிகமுள்ள மாணவர்களை அவ்வாறு அழைப்பது பள்ளிகளில் வழக்கம். அதே போல இறப்பு இடங்களிலும் இறுதியாக அமர்ந்துள்ளவர்களிடையே நடக்கும் விவாதங்கள் அழுது கொண்டு வரும் உறவுகளை நக்கல் நையாண்டி செய்துக்கொண்டும் சத்தமில்லமல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டும் அங்கு அவர்கள் பேசாத விடயங்களே இல்லை உள்ளூர் சங்கதி, அரசியல் தொட்டு உலக அரசியல் வரை என பல பரிமானங்களில் நடக்கும் விவாதங்கள் சுவரசியமானவை. அவைகளை வெகு நேர்த்தியாக வாசிக்க வாசிக்க சிரிப்பை அடக்க முடியத வகையில் புனைவின் நாயகன்(ராசு) வாயிலாக நம்மை உணரவைப்பதில் ஆசிரியர் வெற்றிக் கண்டுள்ளார்.

அதேபோல உறவுகளின் வஞ்சகம், வன்மம் அது என்னவோ பொதுசிந்தனையோடும் நேர்மையாக இருக்க எண்ணுபவனையே இந்த உலகம் (உறவுகளும்) சோ(வே)தனைக்குள்ளாக்குகிறது. ராசு மனநிலையில் பாரக்கும் போது வடிவேல் சொல்வது போல “ஏண்டா உனக்கு வந்தா ரெத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா??” என்று ராசு மாமானை கேட்கவேண்டும் போல இருக்கும் நமக்கு.

இதை நான் என் வாழ்க்கையில் நடந்த இறப்பு சம்பவங்களில் அனுபவித்துள்ளேன். எனக்கு விவரம் வந்த பிறகு என் குடும்பத்தில் முதல் இறப்பு என் தந்தையின் இறப்பு. அடுத்த 6மாதத்தில் என் ஆத்தாவின்(தந்தையில் தாய்) இறப்பு. என் தந்தையின் இறப்பில் நடந்த வஞ்சத்தையும் வன்மத்தையும் உள் அரசியலையும் கவனித்து அனுபவமாக கொண்டு என் ஆத்தாவின் இறப்பில் என்னை நான் நிலை நிறுத்திக்கொண்டேன்.

என் பார்வையில் உறவு என்பது உறையில் உள்ள கத்திப் போல அது ஒரு ஓரமாக இருக்கும் வரை பாதகமில்லை. மாறாக அதை வெளியே எடுத்து பார்ப்போமானால் காயப் படுத்தாமல் மீண்டும் உறைக்குள் செல்லாது என்பது நிச்சயம்.

ஆசிரியர் இந்த புனைவின் நோக்கம் அந்த பகுதியில் நடக்கும் சூலியல் பேரழிவு, சாதிய ஒடுக்குமுறை அதன் பின் உள்ள நுன்அரசியல். அமவராதி ஆற்றல் கணக்கில்லாம் அல்லப்பட்டு கேரளாவுக்கு அனுப்படும் மணல். ஆற்றின் ஆன்மாவை கொள்ளும் இந்த கொடுர நிலை. அதன் பாதிப்பே நிலத்தடி நீர் மட்டம் அகலபாதாலம் சென்றதே. வற்றிய கிணறுகள் வறண்ட பூம்பி காற்றாலை கம்பங்கள் வந்ததே வந்தும் மின்சார தட்டுபாடு அதன் பின் உள்ள அரசியல். கொட்டு முழக்கு பாட்டுக்காரன் கருத்தான், அவன் கூட்டுகாரன் சின்னா, ராசு, மற்றும் ஆன்மீகவாதி சசி மோகன். இடைஇடையே வரும் எழுத்தாளர் எடிமலை(இவர் மூலம் எழுத்தாளர்கள் பற்றிய சுய விமர்சனம்). இவர்கள் இடையே நடக்கும் உறையாடலை கொண்டு கொட்டு மொழக்கை தரமாக நிகழ்த்தி நம்மை நடநடனமாட வைக்கிறார் நூல் ஆசிரியர். அருமையான இன்றைய நவீன இலக்கியப் படைப்பு வாய்ப்பு கிடைப்பின் வாசியுங்கள்.


நன்றி.
மனோ குணசேகரன்,
புள்ளவராயன்குடிகாடு,
மன்னார்குடி.

Leave a Reply