கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மதுரையில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 24.1.2022 காலை 11.மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தங்கப்பாண்டியன் (தமிழ் நாடு சுயாட்சி கட்சி), மீ.த.பாண்டியன் (தமிழ்த் தேச மக்கள் முன்னணி), தமிழ்தாசன் (நாணல் நண்பர்கள்), கதிர் நிலவன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), மதிவாணன் சி.பி.ஐ.(எம்.எல்.) அக்கு ஹீலர் உமர் பாரூக் (அறம் அறக்கட்டளை), மருத்துவர் செயக்குமார் அகரம் அறக்கட்டளை), பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்) அன்னவயல் காளிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் ஆனந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ரெ.இராசு, கரிகாலன், புருசோத்தமன், அறிவழகன், மேரி, சந்திரா உள்ளிட்ட தோழமை இயக்கத்தினர் மற்றும் மாற்று மருத்துவர்களும் பங்கேற்று கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
—
செய்தி உதவி:
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.