இன்று (20.03.22) மன்னார்குடி நநிப, கோபாலசமுத்திரம் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது.
இதில் பள்ளி மேலாண்மை குழுவினரது பொறுப்புகள், கடமைகள் இப்பள்ளி சூழலை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல், மாணாக்கர்களின் கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற கூட்டப் பொருள் பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. G.வீரக்குமார் அவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் திருமதி மற்றும் திரு. சுமதி நெடுஞ்செழியன் அவர்கள், திருமதி மற்றும் திரு.சூரியகலா ராஜகோபால் அவர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.தனபால் அவர்கள், தலைமை ஆசிரியர் மா.தேவி மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இக்கல்வி ஆண்டின் அரசு மானியத்தில் இருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒரு புதிய SMART வகுப்பறை சிறப்பு அழைப்பாளர்களால் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.