அரசு பணிக்கு செல்வதில் திருத்துறைப்பூண்டி பகுதி இன்னும் பின்தங்கியே உள்ளது ஆகவே போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணாக்கர்கள் தயாராக வேண்டும்: புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பேச்சு.
திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 09/04/2022 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பேசியதாவது:
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் படித்த பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே பள்ளிக்கூட தம்பி என்று சொல்லும் காலமாக இருந்தது. ஆனால் இன்று எவ்வளவோ வளர்ந்து விட்டோம், நமது பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் பற்பல பட்டங்களை பெற்றவர்கள் உள்ளனர், அதேநேரத்தில் இதற்கு அடுத்த கட்டமாக படித்தவர்கள் அரசு பணிகளுக்கு செல்வதிலும், மத்திய மாநில அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு ஆட்சி அதிகார பதவிகளுக்கு செல்வதில் இன்னமும் பின்தங்கியே உள்ளோம்.
இதை நிலை குறித்து நிறைய கவலைகள் உள்ளது. ஆகவே மாணவர்களை பள்ளியளவில் இருந்தே போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயார் படுத்த வேண்டும். இனி வரும் காலங்கள் போட்டிகள் சவால்கள் நிறைந்த தாகவுமே இருக்கும். இதை கருத்தில் கொண்டு மாநில, தேசிய, உலகளவிலான போட்டியாளகளுக்கு இணையாக வெல்ல கூடிய அளவில் தன்னம்பிக்கையை மாணவர்களுக்கு உருவாக்கிட வேண்டும் என ஆசிரியர் பெருமக்களிடம் விண்ணபித்து வேண்டிக் கொள்கிறேன். மாணவர்கள் ஆசிரியர் சொல்வதை 100% கேட்க வேண்டும், இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வதை தவிர்த்திட வேண்டும்.
மாணாக்கர்களை நம்பி அவர்கள் பெற்றோர் உறவினர்கள் மட்டும் அல்ல நாளை தேசமே உள்ளது. ஆகவே முடிவெட்டுதல் உள்ளிட்ட ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு மாணவர்களும் கண்ணியத்துடன் நடந்து பொறுப்பை உணர்ந்து படித்து பெரிய பெரிய பதவிகளை பெற்று பெற்றோரின் கனவை நினைவாக்க வேண்டும்” என்று பேசினார்.
—
செய்தி உதவி:
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.