Home>>இந்தியா>>தஞ்சை தேர் திருவிழா விபத்து: என்று தான் விடியுமோ???
இந்தியாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்

தஞ்சை தேர் திருவிழா விபத்து: என்று தான் விடியுமோ???

தஞ்சை தேர் திருவிழா விபத்து: ஆழ்ந்த இரங்கல்கள்.


மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு. களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூசை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.

அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்,விபத்திற்கு யார் காரணம் என்ற விவாதத்திற்கு எல்லாம் போகுமுன், நீண்ட காலமாக என்னுடைய மனதில் இருக்கும் ஒரு கேள்வி சுதந்திரமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நம்மால் மின் கம்பிகளை தலைக்கு மேல் தொங்க விடமால், பூமிக்கு அடியில் ஏன் கொண்டு செல்ல முடியவில்லை??

யாரோ ஒருவர் சிலை வைப்பதற்கு பல ஆயிரம் கோடிகள் இலவசங்களுக்கு பல ஆயிரம் கோடிகள், ஊழல், லஞ்சம் பல லட்சம் கோடிகள் என என்ன பணப்புழக்கம் மிகுந்த இந்த நாட்டில் ஏன் இந்த மின்சார உள்கட்டமைப்பை சரி செய்ய முடியவில்லை??

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மட்டுமன்றி பல மாநிலங்களில் மின்சார உள்கட்டமைப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் உள்ளது புதிதாக பல இணைப்புகள் மட்டுமே பெருகி. உள்ளன. இந்த அவல நிலைக்கு யார் காரணம்?? இதற்காகவா நம் முன்னோர்கள் பாடுபட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள்??
அதற்கு நம்மை ஆங்கிலேயர்களே ஆட்சி செய்திருக்கலாமே!!

நமக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த எத்தனையோ நாடுகள் எந்த ஒரு வளமும் இல்லாத நாடுகள் கூட உள்கட்டமைப்பு வசதிகளில் உச்சத்தை அடைந்து இருக்கிறார்கள். நம்மால் ஏன் அதை அடைய முடியவில்லை??

பெரிய நாடு என்பதுதான் ஒரு தடை என்றால், நிர்வாக வசதிக்காக மேலும் சில நாடுகளாக பிரிக்கலாமே??
அதேபோல் மாநில அரசுகளும் அதே லட்சணத்தில்தான் உள்ளன. ஒரு தனியார் முதலாளி அம்பானி ஜியோ பைபர் என்று ஊர் முழுவதும் முறையான கட்டமைப்போடு கேபிள் வயர்களை எடுக்கிறார்கள். அப்படியிருக்க சர்வ வல்லமை படைத்த ஒரு அரசாங்கம் படுமோசமான நிலையிலேயே இந்த மின்சார கட்டமைப்பை வைத்திருப்பது வேதனைக்குரியது. என்று தான் விடியுமோ???


திரு. செந்தில்பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply