திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கிவரும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான தோழர் முகமது ரியாஸ் நினைவேந்தல் மற்றும் குருதிக்கொடை முகாம் மன்னார்குடி தேசிய நிலைப்பள்ளியில் (01/05/2022) நடைபெற்றது.
உயிர் காப்பான் தோழன், பல உயிர்களை காப்பான் எங்களுடைய தோழர் ரியாஸ். பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை வாழ்நாளில் ஏதாவதொன்று செய்யனும். அவ்வகையில் எங்களின் நண்பர் மன்னையின் மைந்தர்கள் அமைப்பில் செயல்பட்டாலும் தன்னுடைய இறுதி காலத்தில் அவசர கால இரத்த தானத்திற்கு திருவாரூர் மன்னார்குடி நண்பர்களை இணைத்து தீவிரமாக செயல்பட்டார்.
ஊரில் பசுமை காப்பது மன்னார்குடியில் களத்தில் நிற்பது மாவட்ட அளவில் குருதி கொடுப்பது என்று தீவிரமாக செயல்பட்டவர் திடீரென தமது வாழ்க்கை பயணத்தை சத்தமில்லாமல் கடந்த 24/04/2022 அன்று இயற்கையுடன் கலந்தார். இவரது மரணம் மறக்கும் வகையினில் இருந்து விடக்கூடாது என்று அனைவரும் முடிவெடுத்தோம்.
மன்னையின் மைந்தர்கள் அமைப்பு உறுப்பினர்கள், பள்ளி தோழர்கள், உப்புக்காரத்தெரு நண்பர்கள் என்று அனைவரோடும் விவாதித்து, குறுகிய காலத்தில் குருதிக்கொடை முகாமிற்கு எளிமையாக ஏற்பாடு செய்தோம். மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி பிரிவு எங்களுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது.
அதுபோல தேசிய மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஐயா. சேதுராமன் அவர்கள் பள்ளி வளாகத்தில் நடத்திக்கொள்ள எங்களுக்கு உரிமையை கொடுத்தார். அதோடு நிகழ்வு தொடங்கும் நேரத்திற்கு சரியாக வந்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தமது முன்னாள் மாணவர்களோடு நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
நண்பர்கள் அனைவரும் தங்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்விற்கு வந்து குருதிக்கொடை முகாமை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொடுத்தனர்.
மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் குருதி கொடை அளித்தவர்கள் செந்தில், நேதாஜி, ஜவஹர், ஜெயபிரகாஷ், பைசல் ரகுமான், சதீஸ் குமார், நிரஞ்சன், கரண் கார்த்தி மற்றும் வெளியில் இருந்து முகமது ரிஸ்வான், பிரகாஷ், குளஞ்சி ராஜேஷ், மணிகண்டன், ஜீவானந்தம், எழில்ரசன், அருண்பதி, கேசவன் மற்றும்
முத்து குமரன்.
நேற்று நம்மோடு இருந்தவர் இன்று உயிராக நம்மோடில்லை, ஆனால் இறையாக நம்மை இயக்குகிறார்.
—
செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.