Home>>இந்தியா>>பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்!
இந்தியாகாவல்துறைதமிழ்நாடுதிறவுகோல்வரலாறு

பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்!

அரசியல் சட்டக் கூறு 142-ன் கீழ், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காத கவர்னருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது! “பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் என்பது முக்கியமானது. ஆளுநர் தன் கடமை தவறியுள்ளார், சட்டவிரோதமாக நடந்துள்ளார், அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

இதுவரை பேரறிவாளனை விடுதலை செய்யாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காலதாமதம் செய்தது சட்டவிரோதம். தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அதை மதிக்காமல் காலதாமதம் செய்தவர்.

ஆளுநர் அரசியல் சட்டப்படி நடக்காமல் கடமை தவறிய ஆர்.என்.ரவி தன் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும்! அரசியல் சட்டத்தின் 142 வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்த நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், போபண்ணா ஆகியோருக்கு நன்றி.

தொடர்ந்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய, தொடர்ந்து விடுதலை முயற்சிகளை முன்னெடுத்த தமிழக அரசுக்கு நன்றி.
பேரறிவாளனைப் போலவே ஏனைய ஆறு தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!

அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைபட்டுள்ள உணர்வாளர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்!


திரு. பேராசிரியர் ஜெயராமன்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.

Leave a Reply