Home>>அரசியல்>>கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்ட நடத்த முற்பட்டவர்கள் கைது.
அரசியல்இந்தியாகல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்ட நடத்த முற்பட்டவர்கள் கைது.

திருச்சி, திருவெறும்பூரில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும், தனியார் பள்ளிகளில் தொடரும் மாணவ, மாணவிகளின் மரணத்தை தடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட போது, காவல்துறை அராஜகமான முறையில் நடத்த விடாமல் தோழர்களை குண்டுகட்டாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜனநாயக முறையில் போராடுகின்ற போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டிக்கிறோம். இதில் 15 பெண்கள் உள்பட 50 தோழர்கள் கைதாகினர். இதில் DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாநகர் மாவட்ட தலைவர் ரேணுகா, DYFI காட்டூர் பகுதி நிர்வாகிகள் ஜாகீர், நவநீதகிருஷ்னண், சந்தோஷ், யுவராஜ், சாதிக், சுபாஷ், ரிச்சர்ட் மாதர்சங்க நிர்வாகிகள் மல்லிகா குமார், யமுனா, நித்யா M.C, மாற்று திறனாளிகள் சங்கம் செயலாளர் சித்ரா உள்ளிட்ட தோழர்கள் கைதாகியுள்ளனர்.


செய்தி உதவி:
தோழர். லெனின்பாபு காத்தவராயன்,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply