Home>>அரசியல்>>அதிமுகவினருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இவர்களுக்கு வழங்காதது ஏன்? ஆளுக்கொரு நீதியா?
அரசியல்கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

அதிமுகவினருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இவர்களுக்கு வழங்காதது ஏன்? ஆளுக்கொரு நீதியா?

திரு.ஆனந்தராஜ்

கடந்த 10 நாள்களுக்கு முன் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கலவரம் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதபடுத்தபட்டன, காவல்துறையில் சிலருக்கு காயம், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அங்கிருந்த கடைகள் பூட்டபட்டன, இரு தரப்பும் ஆயுதங்களால் மோதிக்கொண்டன. இருதரப்பும் மோதிகொண்ட இதுதான் மிகப்பெரிய கலவரம். இதில் சம்பவம் நடந்த அன்று சிலர் கைது செய்யபட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரிதாக யாரும் கைது செய்யபடவில்லை.
இப்போது இருதரப்பிலும் பல ஊரில் உள்ள பலருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது விசாரனைக்கு ஆஜராக வேண்டும் என்று.

ஆனால் கள்ளகுறிச்சி சம்பவத்தில் உடனடியாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் இருதரப்பு மோதல் கிடையாது, ஒரு மாணவியின் மர்ம மரணம் அதை தொடர்ந்து போராட்டம். அதில் காவல்துறைக்கும் போராட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, அதில் உணர்ச்சிவசபட்ட சிலர் பள்ளியை தாக்கியுள்ளனர்.

இது உணர்ச்சி பிழம்பால் ஏற்பட்ட சம்பவம், முன்னது (அதிமுக அலுவலக மோதல்) இருதரப்பும் திட்டமிட்டு நடைபெற்ற மோதல் கலவரம். ஆனால் அதில் தமிழக அரசும் காவல்துறையும் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. இந்த கள்ளகுறிச்சி சம்பவத்தில் காவல்துறையும் தமிழக அரசும் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறது.

இதிலும் சம்மந்தபட்டவர்களாக சந்தேகிக்கபடுபவர்களும் சம்மன் அனுப்பி விசாரணை செய்து பிறகு கைது செய்யவேண்டியதுதானே
உடனடியாக சம்பவத்தில் சம்மந்தபட்டவர்கள், சம்மந்தபடாதவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறார்கள் என அனைவரையும் உடனடியாக இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?

அதிமுகவினருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இவர்களுக்கு வழங்காதது ஏன்? ஆளுக்கொரு நீதியா? ஆக மொத்தத்தில் இந்த அரசின் நோக்கம் போராட்டத்தின் வீரியத்தை குறைக்க வேண்டும், போராட்டம் நீர்த்து போகவேண்டும், மாணவியின் மர்ம மரணத்தை திசைதிருப்ப வேண்டும். இதை பற்றி யாரும் இனிமேல் பேச கூடாது என்பதுதான்.


திரு.ஆனந்தராஜ்,
மன்னார்குடி அமமுக நகர செயலாளர்,
மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.

Leave a Reply