Home>>அரசியல்>>அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 400 மையங்களில் சிபிஎம் போராட்டம்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 400 மையங்களில் சிபிஎம் போராட்டம்.

ஜூலை 29, 2022: அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 400 மையங்களில் சிபிஎம் போராட்டம் – சென்னை சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்பு.


சென்னை, ஜூலை 29- அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதித்துள்ளது. இத்தகைய வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு வெள்ளியன்று (ஜூலை 29) தமிழகம் முழுவதும் 400 மையங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில், சாஸ்திரி பவன் முன்பு முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

நொறுங்கும் வாழ்வு:
இதில் கலந்து கொண்டு செய்தி யாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், ஒன்றிய அரசின் வரி விதிப்பால் சாதாரண மக்களின் வாழ்வு நொறுங்குகிறது என்றார். “உலகிலேயே கார்ப்பரேட்டுகளி டம் குறைவான வரியும், ஏழை களிடம் அதிக வரியும் வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதில், அம்பானி, அதானி போன்றோ ருக்கு கூடுதலாக வரிச்சலுகையும் தருகிறார்கள். ஒரு நாளைக்கு 1400 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் அம்பானி, அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள், அதீத லாபம் ஈட்டும் பெருநிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மீது அதிக வரி விதிக்க வேண்டும். மாறாக, ஒரு வேளைச் சோற்றுக்கு வழி யில்லாத ஏழை, எளிய மக்கள் மீது வரியை விதிக்கிறார்கள்’’ என்றும் அவர் சாடினார். மேலும் அவர் கூறியதாவது: பெருமுதலாளிகள் வாங்கிய கடன் பத்தே முக்கால் லட்சம் கோடி யை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது. அவர்களுக்கு மீண்டும் ரூ.2.40 லட்சம் கோடி கடன் கொடுத் துள்ளது. அதை வசூலிக்காமல், வட்டிச் சலுகை தருகிறது. விவ சாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய மறுக்கிறது. பணம் இல்லை என்று ரயில், விமானம், நெடுஞ் சாலைகளை விற்கிறது. ஏகபோக கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டாக மோடி அரசு செயல்படுகிறது. உப்புக்கு வரி விதித்து வெள்ளையர்கள் கொள்ளை யடித்தார்கள். ஒன்றிய அரசு, அரிசிக்கு வரி விதித்து அம்பானி, அதானி கொள்ளையடிக்க வழி வகுத்துள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை, மாவு, பென்சில், பேனா என வரி போடாத பொருட்களே இல்லை. புதிதுபுதிதாக வரிகளை விதித்து ஏழைகளை வஞ்சிக்கிறது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் நொறுங்குகிறது. இதனை கைவிட வேண்டும். பல ஆயிரம் கோடி வரு வாய் ஈட்டும் பெரு நிறுவனங் களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும்.

கேரளா எதிர்ப்பு:
மாநில அரசுகளின் ஒருமித்த ஒப்புதலோடு உணவுப் பொருட் களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட தாக ஒன்றிய நிதியமைச்சர் கூறு கிறார். இதனை கேரள நிதியமைச் சர் கே.என்.பாலகோபால் மறுத்துள் ளார்; கவுன்சில் கூட்டத்திலேயே அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரி வித்து கேரள முதலமைச்சர் பின ராயி விஜயனும், ஒன்றிய நிதி யமைச்சருக்கு கடிதம் எழுதியுள் ளார். அம்மாநில சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக நிர்மலா சீதாராமன் பேசு வது கண்டிக்கத்தக்கது. இத்தகைய விலை உயர்வு களை விவாதிக்கவிடாமல், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்துள்ளனர். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக வரலாற்றில் இல்லாத வகையில் 27 எம்.பி.,க் களை இடை நீக்கம் செய்துள்ள னர். இத்தகைய மோடி அரசை எதி ர்த்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு எழ வேண்டும். மதுரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ரத்து செய்க! சர்வதேச சதுரங்கப் போட்டி நடத்துவது தமிழகத்திற்கு பெரு மை; மரியாதை தரக் கூடியது;

பாராட்டுக்கள். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனவே, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை எதிர்த்து ஒன்றிய அர சுக்கு கடிதம் எழுத வேண்டும். மது ரையில் நடைபெற உள்ள கூட்ட த்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், ‘‘உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி-யை, அடுத்தடுத்த கூட்டங்களில் அளவை உயர்த்தி 12, 18, 28 விழுக்காடு அளவிற்கு உயர்த்துவார்கள். விதிவிலக்கு கொடுத்திருப்பதெல்லாம் உண்மை யான விதி விலக்கே அல்ல. அந்த சலுகைகள் யாருக்கும் கிடைக்காது. அது ஏமாற்று. 5 விழுக்காடு விதிக்கப் பட்டுள்ளதாக கூறினாலும், நடைமுறையில் 12 விழுக்காடு வரை அமலாகி உள்ளது’’. என்றார்.

அரசின் கட்டுப்பாட்டில் தனியார் பள்ளிகள்
‘‘மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றால்தான் தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரம் நடக்கும். இதற்காக மாணவர்கள், ஆசிரியர்களை கசக்கிப் பிழி கின்றனர். கல்வி என்பது மாண வர்கள் தானாகவே கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கி, தன்னார்வத்தின் வாயிலாக கற்க வைக்க வேண்டும். மாறாக, கட்டா யப்படுத்தி, அவமானப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு உள்ளா கின்றனர். தற்கொலைக்கு தள்ளப் படுகின்றனர். தனியார் பள்ளிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்’’ என்றும் அவர் வற்புறுத்தினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் 7 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், பி.சுகந்தி, எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். வடசென்னை மாவட்டத்தில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், மாநி லக்குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர்பேசினர். தமிழகம் முழுவதும் நடை பெற்ற போராட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.

Leave a Reply