தமிழர் வழிபாட்டு மதம்.
உலகத்தை படைத்தது கடவுள். அவர் ஒருவரே என்பது எனக்கு தெரிந்தவரை இசுலாமிய மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களில் உலகத்தை படைத்தது கடவுள் என்ற நம்பிக்கையை சார்ந்தது அல்ல. யாரேனும் ஒரு தத்துவஞானி மக்கள் மத்தியில் பல தத்துவங்களை சொல்லி இருப்பார் அவரே அந்த மக்களின் கடவுளாக இருப்பார். இயேசு கிறிஸ்து, புத்தர், மகாவீரர், குருநானக், கன்பூசியஸ் போன்றோர்.
தமிழர்களை பொருத்தவரை இசுலாமியர்களைப் போன்று உலகத்தை படைத்தது கடவுள், அவர் ஒருவரே என்ற கோட்பாட்டில் இல்லாமல் மற்ற மதங்களைப் போன்று யாரோ ஒரு தத்துவஞானியை பின்பற்றியும் கடவுள்களை உருவாக்கவில்லை. இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களான நம் முன்னோர்களை இருக்கும்போது தலைவன் இறந்தபோது இறைவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலே கடவுளாக வணங்குகிறார்கள். அதனால்தான் இங்கே பல கடவுள்கள் உள்ளன.
தமிழர்களைப் பொறுத்தவரை கடவுளை மனிதனும் படைக்கவில்லை, மனிதனை கடவுளும் படைக்கவில்லை. இந்த மண்ணில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்களை தான் கடவுளாக வணங்குகிறார்கள். நம்ம வீட்டிலும் அந்த பழக்கம் உண்டு. நம் வீட்டில் இறந்த முன்னோர்களை புகைப்படம் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. அதேபோலத்தான் நடு கல் வழிபாடு, இயற்கையை வழிபடுவது, மண்ணில் வாழ்ந்த மாமனிதர்களை இறந்தபோது அவர்களை கடவுளாக நினைத்து வழிபடுவது இவைகள் தான் தமிழர்களின் வழிபாட்டு முறைகள். ஆனால் இடையில் புகுந்த ஆரியம் தமிழர்களின் வழிபாட்டு முறைகளை தனதாக்கிக் கொண்டது. அதனோடு ராசமௌலி படம் போல பல மசாலாக்களை சேர்த்து கடவுள்களை கற்பனையாக மாற்றியது.
ஆகவே நமது இப்போதைய வழிபாட்டுமுறை என்பது தமிழர்களின் சிதைந்து போன ஆரிய வழிபாடுதான். எனவே நம் தமிழர்களின் உண்மையான வழிபாட்டை மீட்க வேண்டும். அதுதான் இப்போது காலத்தின் தேவை. அதை கடவுள் மறுப்பு என்ற பெயரில் திராவிடம் செய்யத்தவறியது.
ஆரியம் என்னும் விஷச் செடிகளை அழிக்கின்ற சாக்கில் தமிழர் பண்பாடு என்ற அரிய மூலிகைகளையும் சேர்த்து அழித்தது. அதன் பயன் ஆரியத்தை இன்னும் அழிக்க முடியவில்லை அது வேரூரின்றி இன்னும் வலுவாக இருக்கின்றது. ஆனால் தமிழர் சமயம் மற்றும் வழிபாட்டு முறைகள் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டன. இதுதான் திராவிடத்தின் சாதனை.
தமிழர் பண்பாட்டு மீட்சி எவ்வளவு முக்கியமோ அதே போல வழிபாட்டு மீட்சியும் மிக அவசியம். அதற்கு முதல் வேலையாக கிந்து மதம் என்ற ஆரிய சூழ்ச்சியில் சிக்கி சீரழியக்கூடாது.
சைவம் வைணவம் என்பதே தமிழர்களின் மதம் ,சமயம், மரபு எனலாம். அதற்கான கடவுள்கள் சிவன், முருகன், மாயோன் கொற்றவை போன்றோர்கள் தான். சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள், அவங்களால் கட்டப்பட்டதே தஞ்சை பெரிய கோவில். எனவே சோழர்கள் நிச்சயம் சைவ மரபினர் மட்டுமே கிந்து மதம் என்ற கற்பனையை சார்ந்தவர்கள் அல்ல.
கடந்த 100 வருடங்களாக கிந்து மதம் என்பது சட்ட ரீதியாக நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. நாம் கிந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் தொடர்ந்து இதுபோன்று வலியுறுத்தல்கள் அதிகமாக வேண்டும். சைவ மதம் என்று அரசானையில் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் கிந்து மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற முடியும். இல்லையென்றால் எனக்கு எந்த மதமும் இல்லை என்ற ஒரு வாய்ப்பாவது இருக்க வேண்டும். கர்நாடகாவில் லிங்காயத்துகள் எப்படி தனியாக கிந்து மதத்தில் இருந்து பிரிந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் கிந்து மதத்தில் இருந்து பிரிந்து சைவம் என்ற நமது அடையாளத்தை நோக்கி செல்ல வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருக வேண்டும்.
TamilsAreNotHindus
#தமிழர்கள்கிந்துக்கள்அல்ல
#தமிழர்சைவம்
#தமிழர்வைணவம்
—
மன்னை செந்தில் பக்கிரிசாமி.