Home>>அரசியல்>>மாவீரன் ப.ராஜேந்திரன் பிகாம் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சி.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

மாவீரன் ப.ராஜேந்திரன் பிகாம் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சி.

மாவீரன் ப.ராஜேந்திரன் பிகாம் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.உலகநாதன் அவர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய தோழர் ப.ராஜேந்திரன் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சி இன்று (16/10/2022) நடுவகளப்பாளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான க.மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.உலகநாதன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.அம்புஜம் ஆகியோர் பங்கேற்று தியாகியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.முருகையன் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.

ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினரும் குறிச்சிமூலை ஊராட்சி மன்ற தலைவருமான கே.எம். அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்நாதன், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன், களப்பால் கூட்டுறவு சங்க தலைவரும் நிர்வாக குழு உறுப்பினருமான எம்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வி.தங்கையன், விதொச ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இலரா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் எம்.நல்லசுகம், நிர்வாக குழு உறுப்பினர் தோழர்கள் பி.சௌந்தராஜன், ஆர்.சுலக்சனா, எம்.சிவசண்முகம், பி.பழனிச்சாமி, பி.லிட்டின்மேரி, எம்ஆர்ஆர் முருகேசன், எம்.மனோகரன், ப.பழனி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் சாந்தி மகேந்திரன், சாந்தி எம்ஜிபாலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குலமாணிக்கம் புவனேஸ்வரி குப்புசாமி, நல்லூர் ஹேமலதா ஆரோக்கியசாமி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள் களப்பால் என்.ராஜமாணிக்கம், ஆர்.நாராயணசாமி, குறிச்சிமூலை பக்கிரிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள், கட்சி கிராம சங்க தோழர்கள் பெருந்திரளான மாதர்கள் பங்கேற்று தியாகியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply