Home>>அரசியல்>>மன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.
அரசியல்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்தும், அந்த உணவகத்தில் பணியாற்றும் இந்திக்காரர்களை பணியிலிருந்து வெளியேற்றுமாறும் 10.11.2022 அன்று, நாம் தமிழர் கட்சியின் மன்னார்குடி சட்டமன்ற வேட்பாளர் திரு ராம.அரவிந்தன் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியானது அந்த உணவகத்தின் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வன்முறையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றி விடுகிறோம் என அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அடிப்படையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது அந்த உணவக நிறுவனம் திரு ராம.அரவிந்தன் மீது காவல்துறைக்கு புகார் அளித்துள்ளது. அதையொட்டி காவல்துறை விசாரணைக்கு ராம. அரவிந்தன் அவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், இன்று அவரது முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார்.

வாசகர் பார்வைக்கு…

“மன்னார்குடியில் ஒரு துரித உணவகத்தில் பணிபுரியும் வடமாநில இந்திக்காரர்களினால் அங்கேயே பணிபுரிந்த நமது தமிழ் இளைஞன் தாக்கப்பட்டதனையடுத்து அக்கடையில் பணிபுரியும் வட இந்திக்காரர்களை வேலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக அன்போடு கூறினோம். ஆனால் அக்கடையின் உரிமையாளர் என் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதற்காக நேரில் விசாரணைக்கு காவல்துறையினர் என்னை அலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்ததனை நான் ஏற்கவில்லை.

கடிதம் மூலமாக தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பியதை பெற்றுக் கொண்டு இன்று (14.11.2022) நேரில் காவல்நிலையத்தில் விசாரணைக்குச் சென்றேன். அங்கு காவல் ஆய்வாளருக்கு அவசர வேறு பணி வந்ததனையடுத்து அவர் கிளம்பிச்சென்றதும், பிறகு விசாரணையினை (22.11.2022) அன்று ஒத்திவைக்குமாறு நமது வழக்குரைஞர் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டதனையடுத்து விசாரணை 22.11.2022ற்கு ஒத்திவைக்கப்பட்டது.


திரு. இராம. அரவிந்தன்,
நாம் தமிழர் கட்சி,
மன்னார்குடி.

###########################

தமிழ்நாட்டில் தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளை அதிகார மையத்தால் தொடர்ந்து நசுக்கப்பட்டு கொண்டிருப்பது வேதனையான விடயம்.

இந்த பிரச்சனையில் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க வலியுறுத்துவோம். தொடர்ந்து மன்னார்குடி நகரத்தில் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதோடு இல்லாமல் அவர்கள் ஆதிக்கவும் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் அணுகி இதற்கு ஒரு நல்ல ஒரு தீர்வு வழங்குவது வர்த்தக சங்கத்தின் கடமையாகும்.

Leave a Reply