Home>>போக்குவரத்து>>மன்னர்குடியில் நடந்த கோர சாலை விபத்து. ஒருவர் பலி.
போக்குவரத்துமன்னார்குடி

மன்னர்குடியில் நடந்த கோர சாலை விபத்து. ஒருவர் பலி.

மன்னார்குடியில் நேற்று 23.11.2022 காலை 8:30 மணியளவில் மன்னார்குடி தங்கமணி கட்டடம் அருகே லக்கி சில்க்ஸ் வாசலில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.இவர் மன்னார்குடிக்கு அருகே உள்ள கோட்டூர் ஊரை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் தொழில் செய்து வருகிறார் என்று தெரிய வருகிறது.

எப்போதுமே காலை நேரத்தில் ரொம்ப ரொம்ப பரபரப்பாக இருக்கும் அந்த சாலையில் , திடீரென அரசாங்கப்பேருந்து ஒன்று முன் சென்ற வாகனத்தை முந்த இடது பக்கம் இருந்து வலப்பக்கம் மாறிவந்த காரணத்தினால்
அந்தப் பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் நிலை தடுமாறி பேருந்துக்க்கருக்கே விழுந்து பேருந்து அவர் மீது ஏறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் துறந்தார். கடைகள் மற்றும் நிறுவனங்களின் சாலை ஆக்கிரமிப்பால் தான் சாலை குறுக ஆரம்பித்து இது போன்ற விபத்துகள் நடக்கின்றன என்று தெரிய வருகிறது.


எனவே அரசாங்கம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் போடுவதன் மூலமாக விபத்துகளை குறைக்கலாம் என்பதை விட தரமான சாலைகள், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பரபரப்பான காலை மாலை சமயங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் இருப்பது, பெரும்பாலான வாகன நெருக்கடி உள்ள சாலைகளை ஒருவழிப்பாதைகளாக மாற்றுவது என இது போன்ற செயல்களால் தான் விபத்துகளை ஓரளவுக்கு தடுக்க முடியும். இந்த விபத்தில் அவர் தலைக்கவசம் அணிந்து இருந்தாலும் அவர் உயிரிழப்பது உறுதி. மக்கள் விபத்தின் போது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அவர்கள் தலையாய கடமை. அதே நேரத்தில் தலைகவசம் ஒன்று மட்டுமே விபத்துகளுக்கான தீர்வல்ல. மேலே சொன்ன பல விடயங்களோடு இன்னும் பல விதிமுறைகளை அரசாங்கம் முறைப்படுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் கட்டுப்படுத்தப்படும்.

இந்த நேரத்தில் விபத்தில் அநியாயமாக இறந்து போன அந்த ஆத்மாவின் குரலை சற்று கேட்போம்,

நான் தான் இறந்தவன் பேசுகிறேன் :::

நேற்று தவறு செய்யாமல் மூளை சிதறி இறந்தவன்.

பேருந்து அதிக வேகம்.நான் என் திசையில் போனேன். பேருந்து என் பக்கம் ஏறி வந்து என் தலையை சிதைத்து விட்டான்.குற்றுயிரும் கொலை உயிருமா கிடந்து துடித்துடித்து இறந்தேன்.

பேருந்து ஓட்டுநர் மேல் மட்டும் தவறு என்று சொல்லி ஏமாற்றப்போவது இல்லை இந்த ஏழை.

முக்கிய காரணமே இரு புறம் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு தான். இதை கேட்க வேண்டிய நீங்களோ மவுனமாய் சம்பளம் வாங்குகிறீர்கள்.

சில நாட்கள் பிறந்த ஏழையின் குழந்தை, மனைவி நடு ரோட்டில் இப்போது.

என் குழந்தை இன்னும் 2 ஆண்டுகளில் நான் மூளை சிதறி இறந்த போட்டோ பார்த்தால் எப்படி இருக்கும் மனநிலை.

பெனாயில் தெளிப்பதாலும்,கிருமிநாசினி போடுவதாலும் என் உயிர் திரும்ப வரப் போவது இல்லை.
மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றி மன்னார்குடியில் வாழும் உடன்பிறவா அண்ணன், அக்கா, அம்மா,அப்பா, குழந்தைகளின் உயிரை காப்பாற்றப் பாதம் தொட்டு கேட்கிறேன் விண்ணில் இருந்து.

ஒன்னு சொல்லட்டுமா! மன்னார்குடி நகரத்திற்குள் வாகன நெருக்கடி மற்றும் விபத்துகள் நடக்க காரணமே கடைக்கு விளம்பரம் என்று சாலைகளை ஆக்கிரமித்து வைக்கும் விளம்பரப்பலகைகள்தான்.

அதுசரி. ப்ளீச்சிங் பவுடர் கொட்டுனீர்கள், சுத்தம் செய்தீர்கள், ஆம்புலன்ஸ்ல் அனுப்பி வைத்தீர்கள். இனி விபத்து நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்????

இது இங்கு பதிவிட காரணம் நீங்களும் நகராட்சியிடம் முறையிட வேண்டும் என்பதற்காக.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply