Home>>இதர>>கால்பந்து உலக கோப்பை 2022-ஒரு பார்வை
இதர

கால்பந்து உலக கோப்பை 2022-ஒரு பார்வை

22 வது உலககோப்பை உலகமே வியக்கும் வண்ணம் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது..s

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலம் என்றால் உலகம் முழுவதும் பிரபலம் கால் பந்து.

கிரிக்கெட் உலககோப்பை முதல் பரிசு 20 கோடி.ஆனால் கால் பந்துக்கு தற்போது வெற்றியாளர் அணிக்கு 342 கோடி.

இந்த உலககோப்பை போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை 1930 இல் இருந்து நடந்து வருகிறது..

ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 21 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது.

ஜெர்மனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும்,

அர்ஜென்டீனா, உருகுவே பிரான்ஸ் ஆகியவை இரண்டு முறையும்

இங்கிலாந்து, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

நாம் தற்போது பார்க்க இருப்பது இதற்கு முன் நடந்த 21 கோப்பையின் வெற்றியாளர்கள்

1930 – உருகுவே.

1934 – இத்தாலி

1938 – இத்தாலி

1950 – உருகுவே

1954 – மேற்கு ஜெர்மனி

1958 – பிரேசில்

1962 – பிரேசில்

1966 – இங்கிலாந்து

1970 – பிரேசில்

1974 – மேற்கு ஜெர்மனி

1978 – அர்ஜென்டினா

1982 – இத்தாலி

1986 – அர்ஜெண்டினா

1990 – மேற்கு ஜெர்மனி

1994 – பிரேசில்

1998 – பிரான்ஸ்

2002 – பிரேசில்

2006 -இத்தாலி

2010 – எசுபனியா

2014 – ஜெர்மனி

2018 – பிரான்ஸ்

தற்போது கத்தாரில் நடக்கும் உலககோப்பை அதிக பொருட்செலவில் நடக்கும் முதல் உலக கோப்பையாகும்.

இந்த முறை 32 நாடுகள் விளையாட தொடங்கிவிட்டன. புதிய அணி சாம்பியன் ஆகுமா இல்லை ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் அணிகள் மகுடம் சூடுமா என்பது டிசம்பர் 18 இல் தெரியும்.

உலகின் முக்கிய நாடான இந்தியா ஒரு முறை கூட இதில் பங்கேற்றது இல்லை.

இரண்டாம் உலகபோர் காரணமாக 1942 மற்றும் 1946 இல் உலககோப்பை நடைபெறவில்லை.

1950 ல் பல நாடுகள் விலகியதால் இந்தியா பங்குக்கொள்ள வாய்ப்பு வந்தது.ஆனால் போதிய வசதி இல்லாததால் கடைசி நேரத்தில் இந்தியா பங்குகொள்ளவில்லை..

அதன் பிறகு பல முறை தகுதி சுற்றில் விளையாடி உலககோப்பை வரை இந்தியாவால் முன்னேற முடியவில்லை.

தற்போது கால்பந்து தர வரிசையில் இந்தியா 106 வது இடத்தில் இருக்கிறது.

141 கோடி மக்கள் தொகையில் சிறந்த வீரர்கள் இல்லையா என்று கேட்கலாம்.
கிரிக்கெட்க்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்துக்குக்கு கிடைப்பதில்லை.காரணம் உலக அளவில் பெற்ற வெற்றியே.அதுபோல ஒரு வெற்றியை இந்திய கால்பந்து அணி பெறும் போது,நிச்சயம் பெரும் வரவேற்பை பெறலாம்.அதற்கு இந்திய அணியை தயார் செய்ய வேண்டியது விளையாட்டுத்துறையின் கடமையாகும்.அப்படி செய்யும் பட்சத்தில், இங்கேயும் நம் நாட்டில் மெஸ்ஸி,ரெனால்டோ, நெய்மர் போன்றவர்கள் உருவாவார்கள்.

-ஆனந்த் ரெய்னா

Leave a Reply