தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை,
தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் திருமதி.A. கயல்விழி I.P.S அவர்களது ஆணைக்கிணங்க,
தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா I.P.S அவர்களது உத்தரவின் பெயரில்.
தஞ்சை நகர காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.N ராஜா அவர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மிகவும் சாதுரியமாக செயல்பட்டு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு. மோகன் மற்றும் திரு.புகழேந்தி மற்றும் திரு.சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படைகள்,
மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டன்னை கைது செய்து அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணமாக ரூபாய் 88 ஆயிரம் பணத்தை மீட்டு நீதிமன்ற காவலில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மணிகண்டன் என்பவர் தஞ்சை டெல்டா பகுதி சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் துரிதமாக செயல்பட்டு இந்த குற்றவாளியை கைது செய்தமைக்கு தஞ்சை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தனிப்படை காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இவர்களுடன் தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தின் [பொறுப்பு] காவல் ஆய்வாளர் திரு. பிராங்கிளின் உற்றோ வில்சன் அவர்கள் குற்றவாளியை கைது செய்தது சிறையில் அடைக்கப்பட்டனர்.
நகையும் பணத்தையும் மீட்டு கொடுத்தமைக்கு தஞ்சை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தஞ்சை பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
செய்திகளுக்காக:
“காவல் டுடே” STATE CHIEF REPORTER IN TAMILNADU
மற்றும் தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் A.ராஜேஷ்