60 ஆண்டுகள் – ஆபாசப் புராணத்தால் பிறந்ததா?
60 ஆண்டுகளும் நாரதர் பெண்ணாகிப் பெற்ற பிள்ளைகள், புராண ரீதியிலானவை. எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று ஒரு கூட்டம் வருகின்றது.
இவர்கள் அந்தக் கதைக்கு ஆதாரமாகக் காட்டுவது அபிதான சிந்தாமணியை. ‘பாருங்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலில் ஆபாசக் கதை’ என்கிறார்கள்.
சமண அகராதி நூலான அபிதான சிந்தாமணியும் இப்போது உள்ள அபிதான சிந்தாமணியும் ஒன்று அல்ல. சிங்காரவேலு முதலியார் 20 ஆண்டுகள் உழைத்து மேம்படுத்தப்பட்ட அபிதான சிந்தாமணியை 1910ல் வெளியிட்டார். சுவடிகளில் உள்ள அபிதான சிந்தாமணி, சிங்காரவேலு முதலியார் பதிப்பித்த அபிதான சிந்தாமணி ஆகியவற்றில் இந்த ஆபாசக் கதை இல்லை!
17ஆம் நுாற்றாண்டில் அதாவது நாயக்கர் காலத்தில் தேவி பாகவதம், நாரதர் புராணம் ஆகிய நூல்கள் எழுதப்பட்டன. இவற்றில்தான் முதன்முறையாக நாரதரின் 60 பிள்ளைகள் என்ற ஆபாசக்கதை எழுதப்பட்டது. 1931ல் சிங்காரவேலு முதலியார் இறந்த பின்னர், இந்த இரு நூல்களை மேற்கோள் காட்டி 1937ல் பதிப்பிக்கப்பட்ட அபிதான சிந்தாமணியில்தான் நாரதர் கதை சேர்க்கப்பட்டது!
எனவே மக்கள் ஆபாசக் கதையுள்ள புத்தாண்டைக் கொண்டாடவில்லை, மக்கள் கொண்டாடும் புத்தாண்டின் மேல் ஆபாசக் கதை எழுதப்பட்டது. இது நடந்தது நாயக்கர் காலம் என்பதாலோ என்னவோ வழக்கம் போல திராவிடக் கூட்டத்தினர் புராணத்தின் காலத்தை மறைத்து, 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்த கதை என்கின்றனர். 60 ஆண்டு என்பது வானியல் கலை, ஆபாசக் கதை என்பது திராவிடக் கொடை. பிரித்துப் பார்ப்போம்.
—
திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.