நேற்று மாலை (26.02.2023) மன்னார்குடி-சித்தமல்லியில் நடைபெற்ற நாம்தமிழர் கூட்டத்தில், திமுகவினர் வன்முறை!
இதையடுத்து அந்த கட்சியின் கையூட்டு ஊழல் ஓழிப்பு துறையின் மாநிலத்தலைவரும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான திரு.ராம அரவிந்தன் அவர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“எனது உடன்பிறவா சகோதரி திருமதி.காளியம்மாள் அவர்களை செருப்பைக்காண்பித்து மோசமான நாக்கூசும் வார்த்தைகளால் திட்டி மேலும் அவர் மீது மதுபாட்டில்களை வீசிய திமுக ரவுடிகளை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொள்ள சென்ற என்னை தடுத்துவிட்டார்கள்.
நான் பூனையல்ல, புலி. எனக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அந்த திமுக ரவுடிகளை ஒரு கை பார்த்திருப்பேன் ஏனென்றால் நான் என் தலைவர் வழி நிற்பவன்.என்னைத்தொடுபவன் தலைமுறையையே காணாமல் செய்துவிடும் பலம் என்னிடம் உள்ளது. எனது சகோதரி காளியம்மாள் அவர்களை அவர்கள் அசிங்கமாக திட்டியதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”.
—
திரு. இராம. அரவிந்தன்,
மாநிலத்தலைவர்,
கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை, நாம்தமிழர் கட்சி.
ஈரோடு கிழக்குத்தொகுதியை தொடர்ந்து சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் மீது திமுகவினர் தொடர்ந்து வன்முறை தாக்குதல் செய்வது தொடர் கதையாக உள்ளது. கழுத்தை கதிர் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவற்றவர்கள் மட்டுமே வன்முறையை கையில் எடுப்பார்கள். இது ஒருவர் இயலாமையை காட்டுகிறது. உடனடியாக முதலமைச்சர் அவர்கள் இது போன்ற விடயங்களில் தலையிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடந்த காலத்தில், காங்கிரசு கட்சியின் இப்படிப்படிப்பட்ட வன்முறைகள்தான் திமுகவை வளர்த்துவிட்டது என்ற வரலாற்றை மறந்துவிடக்கூடாது! எந்த புதிய கோட்பாட்டையும் முதலில் அலட்சியம் செய்வார்கள் இரண்டாவதாக எதிர்ப்பார்கள் இறுதியாக ஒப்புக் கொள்வார்கள் இது இரண்டாம் நிலை. நாம் தமிழர் கட்சி கருத்தியல்ரீதியாக மிக வலுவான நிலையை தமிழகத்தில் எட்டி வருகிறது என்பதை சமீப கால சம்பவங்கள் காட்டுகின்றன.
—
செய்தி உதவி:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.