Home>>கல்வி>>மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியில் “எண்ணும் எழுத்தும்”- “கற்றல் கொண்டாட்டம்”
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியில் “எண்ணும் எழுத்தும்”- “கற்றல் கொண்டாட்டம்”

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழ்நாடு அரசால் ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையிலும், மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தினை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இன்று (21.03.23) மன்னார்குடி, நகராட்சி கோபால சமுத்திரம் பள்ளியில் “எண்ணும் எழுத்தும்”- “கற்றல் கொண்டாட்டம்” நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணாக்கர்களின் கற்றல் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.J.இன்பவேணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திருமதி. ர.இலக்கியா, நகர மன்ற உறுப்பினர்கள் திருமதி. நெ.சுமதி, திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த இனிய நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply