மதுரையில் மகளிர் ஆயம் – தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்- மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு!
மதுரையில் உடல் நலத்தைக் கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்யக் கோரி 25.04.2023 செவ்வாய்க்கிழமை காலை 12.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மகளிர் ஆயம் – தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சந்திரா (செயற்குழு உறுப்பினர், மகளிர் ஆயம்) தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் இளஞ்சென்னியன் (தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு), மா.து.இராசுக்குமார் (நிறுவனர், (தமிழக முன்னேற்றக் கழகம்), தமிழ் கார்த்தி (பச்சைத் தமிழகம்), கரிகாலன் (த.தே.பே.), மு.கா.வையவன் (நிறுவனர், தமிழர் தேசியக் கழகம்), பே. மேரி (மகளிர் ஆயம்), ஆகியோர் கண்டன உரையாற்றினர். கதிர் நிலவன் (மதுரை மாநகரச் செயலாளர், த.தே.பே.) நிறைவுரையாற்றினார். தியாகலிங்கம் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோழர்கள் மு. கருப்பையா, புருசோத்தாமன், விடியல் சிவா, தி.கருப்பையா, வழக்கறிஞர் அசோக் குமார், கிளாரா (அமைப்புச் சாரா தொழிலாளர்கள்), இராசேந்திரன் (தொழிலாளர்கள் – விவசாயிகள் கூட்டமைப்பு), கில்டா மேரி, பானு, இலக்கியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தோழர் இராமச்சந்திரன் (தமிழர் தேசிய முன்னணி) கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
முன்னதாக காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் ஆயம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தோழர் இளமதி (மதுரை மாவட்ட அமைப்பாளர் , மகளிர் ஆயம்) கோரிக்கை மனுவை அளித்தார்.
—
செய்தி உதவி:
திரு. கதிர் நிலவன்,
மதுரை மாநகரச் செயலாளர்,
தமிழ் தேசியப்பேரியக்கம்.