Home>>அரசியல்>>ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

இன்று (09/05/2023) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலே காலம் கடத்துவார்கள்? மற்றும் ஆசிரியர் பணியை மட்டுமே நம்பி இத்தனை ஆண்டுகள் கல்வி பணியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இனியாவது விடை கிடைக்குமா? போன்ற கேள்விகளை முன்வைத்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசாணை எண் 149ல் இருந்து, 2013ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு விலக்கு வேண்டியும், திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 177ஐ நிறைவேற்றவும், ஆசிரியர் பணிக்கு வயதை 57 ஆக உயர்த்தவும், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்டேஜால் பணி வாய்ப்பு இழந்த ஆசிரியர் அனைவருக்கும் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.


செய்தி உதவி:
திரு. இராஜ்குமார்,
சென்னை.

Leave a Reply