Home>>கல்வி>>திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாரண மாணவர்களுக்கு சீருடை அன்பளிப்பு
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாரண மாணவர்களுக்கு சீருடை அன்பளிப்பு

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 37500 மதிப்பிலான சாரண மாணவர்களுக்கான சீருடையை பள்ளியின் முன்னாள் மாணவர் வெற்றிவேல் தனது குடும்பத்தாருடன் வருகை தந்து வழங்கி சிறப்பு செய்தார்கள். திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வலைதளத்தில் பள்ளியின் தேவைகளை தலைமை ஆசிரியர் ஜெயலலிதா பட்டியலிட்டு இருந்தார்கள் அதில் சாரண மாணவர்களுக்கான சீருடை தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

அதனை நம்ம பள்ளி வலைத்தளம் மூலம் பார்த்த பள்ளியின் முன்னாள் மாணவர் வெற்றிவேலன் இன்று பள்ளிக்கு தனது குடும்பத்தாருடன் வருகை தந்து ரூபாய் 37500 மதிப்பிலான சாரண மாணவர்களுக்கான சீருடையை வழங்கினார்கள் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் புகழேந்தி, கிரிதரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவரும் சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய வெற்றிவேலன் தனது குடும்பத்தாருடன் சாரணர் சீருடையை பள்ளியின் சாரண ஆசிரியர் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட அலுவலருமான சக்கரபாணி மற்றும் மாணவர்களிடம் வழங்கினார். மேலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க விரும்பினால் அதனுடைய முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வேண்டும். உங்கள் உயர் கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது. முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.

எனவே மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பள்ளிக்கும், உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் முகமது இஸ்மாயில், ஜலாலுதீன் கலந்து கொண்டனர் ஓவிய ஆசிரியர் அன்புமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

 


செய்தி உதவி:
திரு. பாலமுருகன்,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply