Home>>அரசியல்>>மன்னார்குடி மின்சார வாரியம் தனது பணியை அலட்சியமாக மேற்கொள்கிறது.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

மன்னார்குடி மின்சார வாரியம் தனது பணியை அலட்சியமாக மேற்கொள்கிறது.

நேற்று முன்தினம் (12/05/2024) மன்னார்குடி, கீழ 3ஆம் தெரு நல்லான்குளம் பகுதியில் மின்கம்பம் ஸ்டே கம்பியில் வாகனம் மோதி ஒரு மின்கம்பமும் சேதமுற்று மின் ஒயர் தொங்கி கொண்டிருந்தது. மின்கம்பத்தையும், ஸ்டே கம்பியை இடமாற்ற சொல்லியும் அதையும் கேட்காமல் ஸ்டே கம்பியையும் சரி செய்யாமல் மின் கம்பத்தை அதே இடத்தில் புதிதாக போட்டுவிட்டு மின் ஒயர்களை இழுத்து கட்டி விட்டு சென்றார்கள் மின்சார வாரியத்தினர்.

இன்று மீண்டும் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. சற்று கவனக்குறைவாக யாராவது சென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறுந்து விழும் போது யார் மீதாவது விழுந்திருந்தாலும் உயிருக்கு ஆபத்தாக மாறி இருக்கும். இதற்காக தான் மின் கம்பத்தையும், ஸ்டே கம்பியையும் இடமாற்றம் செய்ய சொன்னேன்
அதை மின் வாரிய அதிகாரிகள் அலட்சியபடுத்தினர்.

மேலும் வாகனம் மோதிய ஸ்டே கம்பியை சரி செய்யவே இல்லை. மன்னார்குடி மின்சார வாரியம் தனது பணியை அலட்சியமாக மேற்கொள்கிறது.

தனது கடமையை சரியாக செய்வதில்லை. முக்கிய அதிகாரியின் நோக்கம் வருமானம் மட்டுமே
நேரில் வந்து கூட பணி நடைபெறும் இடத்தை பார்வையிடுவதில்லை.

இந்த மழை மற்றும் காற்று நேரத்தில் இவர்களின் அலட்சியமாக பணியால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


திரு. ஆனந்தராஜ்,
மன்னார்குடி அமமுக நகர செயலாளர்,
மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.

Leave a Reply