அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ஏழைகளுக்கான உணவு திட்டம்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 35 கிலோ அரிசி இந்த மாதம் பலருக்கும் 20 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சம்மந்தப்பட்டவர்களால் சொல்லப்படும் காரணம் வங்கி பரிமாற்றம் இரு சக்கர வாகனம் வைத்திருப்பது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு BPL ஆக இருந்த ஏழை மக்கள் APL ஆக வறுமை கோட்டிற்கு மேல் வந்துவிட்டதாக கூறி AAY குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டதாக கூறுவது ஏற்புடையது அல்ல.
குழுவில் உள்ள பெண்கள் வங்கி பரிமாற்றம் செய்வதும், மானியத்திலும், கடனிலும் இருசக்கர வாகனம் வாங்கியவர்கள், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களா??
எந்த அரசாக இருந்தாலும் இவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நியாய விலை கடைகள் அநியாய கடைகளாக ஆக கூடாது…!!
—
திரு. அமிர்தராஜா,
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி,
மன்னார்குடி.