Home>>அரசியல்>>மன்னார்குடி தூய்மை பணியில் இதுவரை இவ்வளவு சுணக்கமும் தொய்வும் ஏற்பட்டதில்லை.
திரு. அமிர்தராஜா, அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம், மன்னார்குடி.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்தேர்தல்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி தூய்மை பணியில் இதுவரை இவ்வளவு சுணக்கமும் தொய்வும் ஏற்பட்டதில்லை.

மன்னார்குடி நகராட்சி தூய்மை பணியில் இதுவரை இவ்வளவு சுணக்கமும் தொய்வும் ஏற்பட்டதில்லை.

தனியார் ஒப்பந்த நிறுவனம் பணியில் மிகவும் அலட்சியம் காட்டுகிறது. குப்பைகள் கழிவுகளில்
வருமானத்தை ஏற்படுத்துபவைகள் மட்டுமே அப்புறபடுத்தப்படுகின்றன. தூய்மை பணி என்றால் என்ன என்பது ஒப்பந்தகாரருக்கும் தெரியவில்லை, அவர்களின் மேஸ்திரிகளுக்கும் தெரியவில்லை.

பல தெருக்களில் குப்பைகள் தேங்கி நகரை அசிங்கப்படுத்துகின்றன குப்பைகளை நாய்களும்,
மாடுகளும் சாலையில் இழுத்து போட்டு வீதியெங்கும் தூர்நாற்றமும் நோய் தொற்றும் ஏற்படும்
அவலநிலை.

சுகாதார பிரிவு என்று ஒன்று நகராட்சியில் இயங்குகிறதா என்றே தெரியவில்லை நான்கு சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்ற வேண்டிய நகராட்சியில் ஆய்வாளர்களே இல்லை. சுகாதார அதிகாரி ஒருவர் மட்டுமே உள்ளார். கொசு மருந்து பெயரளவுக்கு அடிக்கபடுகிறது, நகரில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தும் இதில் அலட்சியம் தொடர்கிறது.

வரும் முன் காப்பதற்கு தான் டெங்கு பணியாளர்கள், இங்கு நிலைமை தலை கீழ். ஆரம்பத்தில் ஒரு டிவிசனுக்கு 8 டெங்கு பணியாளர்கள் இருந்த நிலையில் இப்பொழுது மூவர் கூட இல்லை. 55 டெங்கு பணியாளர்களுக்கு சம்பளத்தொகை பெறுகின்ற ஒப்பந்த நிறுவனம் 15 நபர்களை அதிலும் அரை நாள் மட்டுமே அந்த பணிக்கு பயன்படுத்துகிறது. மற்றவர்கள் எங்கே???

தூய்மை பணியாளர்கள் விடுப்பு எடுத்தால் மாற்று பணியாளர்கள் கூட சரியாக வழங்க முடியாத தகுதியற்ற நிலையிலேயே ஒப்பந்த நிறுவனம் உள்ளது. 15 மாற்று பணியாளர்களாவது இருக்க வேண்டும்.

நடு வாணிய தெருவில் இருந்து டெப்போ ரோடு RP சிவம் நகர் வரை, சாலையில் நடக்க முடியாத அவல நிலை. இந்த நிலை பல தெருக்களிலும் உள்ளது. தூய்மை பணியாளர்களில் எண்ணிக்கைகளில் பல்வேறு குளறுபடிகள், மக்களின் அடிப்படை பிரச்சனையிலேயே அலட்சியம் காட்டுகிறார்கள்.

மேஸ்திரிகளை கேட்டால், பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும், அதனால் தங்களால் பணி மேற்கொள்ள முடியவில்லை என்கிறார்கள். குப்பைகளை கொட்ட இடம் இல்லை என்கிறார்கள்,
போதிய வாகனங்கள் இல்லை, சொந்த வாகனம் கூட வாங்க வக்கற்ற நிலையில் போலி ஒப்பந்ததாரர் இருக்கிறார் என்கிறார்கள்.

பிறகு எதற்கு ஒப்பந்த பணியை ஒப்பந்தம் எடுக்கிறார்கள் என தெரியவில்லை. கழிவுகளை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறுகிறார்கள். எடை அதிகம் உள்ள மண் சல்லி போன்றவை மட்டுமே அள்ளபடுவதாகவும் தெரிகிறது. எடைக்கு தகுந்தார்போல் ஒப்பந்தகாரருக்கு பணம் என்பதால். எடையை கூட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர், எடை போடுவதிலேயே பல முறைகேடுகள்.

தனியார் ஒப்பந்ததாரர் தன் விருப்பப்படி நிர்வாகத்தை நடத்தி கொள்ளலாம் என்ற நிலை உள்ளது
தூய்மை பணியாளர்கள் நகரமன்ற உறுப்பினர்களிடம் டிரே சைக்கிள்களில் உள்ள குப்பைகளை வாங்கும் டாடா ஏஸ் வாகனம் வரவில்லை என்று கூறினால் கூட எதற்கு அவர்களிடம் கூறுகிறீர்கள் என்று மிரட்டப்படுகின்றனர்.

தெருக்கள் தோறும் குற்று செடிகளும் புதர்களும் மண்டி கிடக்கின்றன. மதிய நேரத்தில் தூய்மை பணியை மேற்கொண்டவர்கள் எல்லாம் குப்பைகள் அதிகம் தேங்கியவற்றை அகற்றுவதாக கூறி வேலை செய்யாமல் ஏமாற்றுகின்றனர். நகரம் முழுவதும் காலை நேரங்களிலேயே வாகனங்களை வைத்து குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் இருந்தும் தெரு முனைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றினால் எப்படி குப்பைகள் அதிகம் உருவாகும். இதனை சரியாக கையாளாத துணை ஒப்பந்தக்காரர் இவற்றையெல்லாம் கவனிக்காத நகராட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனம் தான் குப்பைகள் அதிகம் தேங்க காரணம்.

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களிடன் இதனால் கெட்ட பெயர் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும், தனியார் தூய்மை ஒப்பந்த பணி என்பது தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலை மாறி, இன்று வருமானம் மட்டுமே
குறிக்கோள் என்ற நிலையாகிவிட்டது.

இதனால் பாதிக்கபடுவது பொதுமக்கள் தான். தூய்மை பணியில் முன் அனுபவம் உள்ளவர்களிடம் அந்த பணியை ஒப்படைத்திருக்க வேண்டும்.

துணை ஒப்பந்தக்காரர் என்ற வகையில் அந்த பணியை மேற்கொள்பவர்களுக்கு எந்த அனுபவமும் இல்லை. ஒப்பந்த விதிகள் தங்களுக்கு சாதகமாக வளைக்க பட்டதால் இந்த அவல நிலை.

இந்த நிலை நீடித்தால் மன்னை மின்னவே மின்னாது.


திரு. அமிர்தராஜா,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்,
மன்னார்குடி.

Leave a Reply