திண்டுக்கல் மாவட்டத்தில் இலவசமாக தையல் மிசின் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு..
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணம் இடுப்புக்கு மேல் நன்றாக உடல் இயக்கம் இருக்கும் (மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை தவிர) 18 வயது முதல் 60 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தையல் மிசின் ஆண், பெண் இரு பாலருக்கும் வழங்கி வருகிறது. இந்த தையல் மிசினை பெற நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும், இசேவை மையத்திலும் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு காத்துக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தையல் மிசின் வழங்கும் வகையில் வருகிற 09.01.24 மற்றும் 10.01.24 ஆகிய இரு தினங்களில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தையல் கற்றுக்கொண்டதற்க்கான சான்று, வயதுக்கான சான்று அல்லது கல்வி சான்று, ஆதார், ரேசன் கார்டு, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணகளுடன் காலை 10.00 மணிமுதல் 01.00 மணிவரை நடைபெறும் நேர்காணலில் கட்டாயம் பங்கேற்று பயன்பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயந்தி – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 8220832142