Home>>அரசியல்>>மன்னார்குடி புதுத்தெருவில் ஏற்படும் தொடர் வாகன விபத்துகள்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்போக்குவரத்துமன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி புதுத்தெருவில் ஏற்படும் தொடர் வாகன விபத்துகள்.

மன்னார்குடி, புதுத்தெருவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விபத்துகள், இந்த ஒரு வாரத்தில் 3வது விபத்து. அங்கு நடுவில் உள்ள தடுப்பு சுவரை ( Center Median) அகற்ற வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு அறிகுறிகளுடன் (Safety Signals) இதை அமைக்க வேண்டும் அல்லது 3ஆம் தெருவிலிருந்தே தொடர்ந்து புதுத் புதுத்தெரு திருப்பம் வரை அமைக்க வேண்டும்.

ஒரு பெரிய சாலையில் இடையில் ஒரு 25 மீட்டர் மட்டும் இது அமைக்கப்பட்டுள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தெரியாமல் இந்த விபத்துகள் ஏற்படுகிறது.

பிரதிபலிப்புகள் (Reflectors) கூட இல்லை இதனால் அதில் வாகனங்கள் மோதிய பிறகு தான், அங்கு சென்டர் மீடியன் இருப்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரிகிறது. எங்களை பொறுத்தவரை அந்த இடத்தில் இது தேவை இல்லாத ஒன்று. இதை பலமுறை வலியுறுத்தி விட்டோம். சமீபத்தில் சாலை விரிவுபடுத்திய போது கூட அகற்ற சொல்லி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை.

இந்த சாலை இடையில் 25 மீட்டர் தூரம் மட்டும் உள்ள சென்டர் மீடியனால் ஏதேனும் பலன் இருக்கிறதா? இதனால் விபத்துகள் ஏற்படாமல் இருக்கிறதா என்றால் இல்லை. இதனால் தான் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எதற்காக இடையில் சிறிது தூரம் மட்டும் அமைத்தார்கள் என தெரியவில்லை. இந்த வாரத்தில் மட்டும் ஒரு அரசு பேருந்து 2 கார்கள் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு குடும்பமே தப்பியது ஆண்டவன் செயல். இதனால் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு, பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டால் தான் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நினைக்கிறார்களா என தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் இந்த வழியாக தான் செல்கிறார்கள், பொறியியல் படித்து முடித்து தான் அலுவலர்கள் ஆனார்களா என தெரியவில்லை. பல விபத்துகள் ஏற்பட்ட பிறகும், போக்குவரத்துகாவல் துறையும் இதில் அலட்சியம் காட்டுகிறது.

உயிரிழப்பு ஏற்படும் முன் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திரு.ஆனந்தராஜ்,
மன்னார்குடி அமமுக நகர செயலாளர்,
மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.

Leave a Reply