Home>>இதர>>தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு
இதர

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் (TNRD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிர்வாகம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம்
காலிப்பணியிடங்கள் Office Assistant பணிகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் Office Assistant ( அலுவலக உதவியாளர் ) .நிரந்தரப் பணியிடம்
கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.அதை விட அதிக கல்வித்தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் விருப்பம் இருந்தால் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு குறைந்த பட்சம் :

18 வயது (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்:
Gen – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC / MBC – 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC / ST – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை அடிப்படைச் சம்பளமாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.தேவைப்படின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆன்லைனிலேயே Edit செய்து கடைசி தேதிக்கு முன்னர் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்
விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி 30.11.2020

Leave a Reply